கோடம்பாக்கத்துல அடுத்த காதல் கல்யாணம் இவங்களோடது தானாம்... நம்புவீங்களா, நீங்க நம்புவீங்களா?

|

சென்னை: விரல் நடிகரும், சின்னப்பூ நடிகையும் காதலை வெளிப்படுத்தியது போலவே சீக்கிரமாகவே அதற்கு முற்றுப் புள்ளியும் வைத்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால், நம்பர் நடிகையுடனான காதல் மீண்டும் துளிர்த்து விட்டதாலேயே சின்னப்பூ நடிகையுடனான காதல் முறிந்து விட்டது என புதிய படக்குழுவினர் தெரிவித்தனர்.

அனால், இல்லையில்லை இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இரண்டு புதிய படங்களின் பப்ளிசிட்டிக்காகவே இந்தக் காதல் டிராமா என குற்றம் சாட்டியவர்களும் உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் நடந்த சம்பவம் சின்னப்பூ நடிகையின் முறிந்துபோய்விட்டதாக அறிவித்த காதல் குறித்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

அதாவது ப்ரியமான நடிகையிடம் விழாவைத் தொகுத்து வழங்கியவர், ‘கோடம்பாக்கத்துல அடுத்த காதல் கல்யாணம் எது? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க" எனக் கேட்க, ப்ரியமான நடிகை டக்கென சின்னப்பூ நடிகையைக் கையைக் காட்டியிருக்கிறார்.

இந்தப் பதில் அங்கிருந்த அத்தனை பேரையும் சலசலப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் ப்ரியமான நடிகையின் அருகில் தான் சின்னப்பூ நடிகை அமர்ந்திருந்திருக்கிறார். அவர் இப்பதிலைக் கேட்டு கோபப் படுவார் என அனைவரும் எதிர்பார்க்க, சின்னப்பூ நடிகையோ வெட்கப் புன்னகை சிந்தியிருக்கிறார்.

ஊடகங்களுக்காகவும், பரபரப்பான செய்திகளில் அடிபட வேண்டும் என்பதற்காகவும் தான் இரண்டு பேரும் காதலை ஒளித்துவைத்து விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தை இச்சம்பவம் உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment