ஃபெட்னா தமிழ் குறும்படப் போட்டி - ஏதிலிகள், இரண்டாம் காதலுக்கு முதல் பரிசு!

|

செயின்ட் லூயிஸ்: பெட்னா 2014 தமிழ் குறும்படப் போட்டியில் ஏதிலிகள் மற்றும் இரண்டாம் காதல் ஆகிய படங்கள் முதல் பரிசு வென்றன.

செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த ஃபெட்னா தமிழ் விழாவையொட்டி, தமிழ்க் குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டது.

இயக்குநர் பாலு மகேந்திராதான் இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்து படங்களைத் தேர்வு செய்வதாக இருந்தார். ஆனால் அவர் மறைந்ததால், அந்தப் பொறுப்பை இயக்குநர் பாலா ஏற்றார்.

ஃபெட்னா தமிழ் குறும்படப் போட்டி - ஏதிலிகள், இரண்டாம் காதலுக்கு முதல் பரிசு!

பாலா - சுவாமி கந்தன்

போட்டிக்கு வந்திருந்த படங்களிலிருந்து சிறந்த பத்துப் படங்களை பாலா தேர்வு செய்து கொடுத்திருந்தார்.

இந்தப் பத்துப் படங்களில் முதல் மூன்று பரிசுக்குரிய படங்களை ஹாலிவுட்டில் படங்கள் இயக்கும் தமிழரான சுவாமி கந்தன் தேர்வு செய்தார் (தி சீக்ரெட் வில்லேஜ் படம் இயக்கியவர்).

குறும்படப் போட்டி முடிவுகள்:

முதல் பரிசு தலா 500 டாலர்கள்:

1. ஏதிலிகள்
2. இரண்டாம் காதல்

இரண்டாம் பரிசு: ( 3 குறும்படங்கள், தலா 200 டாலர்கள்)

1. என் உயிர் வாசுகி
2. முதுகெலும்பு
3. இடுக்கண்

மூன்றாம் பரிசு: ( 5 குறும்படங்கள், தலா 100 டாலர்கள்)

1. பாரதி
2. கனவே கலையாதே
3. கார்கில்
4. அந்நிய மண்ணில்
5. ஒரு பொண்ணு வேணும்

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசும், சான்றிதழும் விரைவில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என ஃபெட்னா நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Post a Comment