நடிகைகள் காதலில் விழுந்தாலே கவலைப்படுவது அம்மாக்கள்தான். வருமானம் போய்விடுமே என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும் வகையில்லாமல் சிக்கிவிடக்கூடாதே என்ற பதைப்பும் ஒரு காரணம்.
முத்தழகு நடிகை அந்த மலையாள நடிகரை தீவிரமாக காதலிப்பது உண்மைதான் என்றாலும் தாய்குலத்தின் வற்புறுத்தல் காரணமாகத்தான் மறுப்பு அறிக்கை விடுகிறாராம்.
"காதலிக்கிறதுதான் காதலிக்கிற டாப்புல இருக்கிற ஹீரோக்களை காதலிக்க கூடாதா" என்பதும் தாய்குலத்தின் ஆதங்கமாம்.
அதோடு நாலு படம் வந்துகிட்டு இருக்குற நேரத்துல சம்பாதிக்கிற வழிய பார்க்காம காதல் கீதல்னு அலைஞ்சா நீ பிள்ளையும் இல்லை நான் அம்மாவும் இல்லை என்றும் அம்மா சென்டிமெண்ட் ஆக தாக்குதல் நடத்தியுள்ளாராம். இதுவே முத்தழகு நடிகை காதலுக்கு மறுப்பு அறிக்கை விட வைத்துள்ளது.
ஆனாலும் இப்போ அம்மாவுக்கு தெரியாமல் காதலை வளர்க்கிறாராம் முத்தழகு நடிகை. கத்திரிக்கா முத்தினால் கடைத் தெருவுக்கு வராமலா போய்விடும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
Post a Comment