அசின் -சல்மான் காதல்... அதாவது பி.ஏ. என்ன சொல்றாருன்னா..!

|

மும்பை: சல்மான்கானிடம் அசின் வீடு எதையும் பரிசாக வாங்கவில்லை, அது பழைய கிசுகிசு என அசினின் உதவியாளர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்த அசின், கஜினி படம் மூலம் இந்திக்கு சென்றார். அதனைத் சல்மான்கானுடன் ‘லண்டன் டிரீம்ஸ்' படத்தில் நடித்தார்.

பொதுவாக உடன் நடிக்கும் நடிகைகளுடன் சல்மான் பெயர் இணைத்து பேசப்படுவது வழக்கம். அந்தப் பேச்சுக்கு அசினும் தப்பவில்லை.

அசின் -சல்மான் காதல்... அதாவது பி.ஏ. என்ன சொல்றாருன்னா..!

லண்டன் ட்ரீம்ஸ்...

லண்டன் ட்ரீம்ஸ் படத்தின் போது, சல்மான் - அசின் இடையே காதல் உண்டானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. காதல் பரிசாக பல கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கி அசினுக்கு சல்மான் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது.

3 படுக்கையறை வீடு...

இந்நிலையில், தற்போது கிக் படத்தில் இலங்கை நடிகை ஜாக்குலினுடன் நடித்து வருகிறார் சல்மான்கான். இப்போது ஜாக்குலினை சல்மான் காதலிப்பதாகவும், சமீபத்தில் ஜாக்குலின் குடியேறிய 3 படுக்கையறை கொண்ட வீடு சல்மானின் காதல் பரிசு என்றும் ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

லாஜிக்....

ஆனால், அத்தகவலை சல்மான் மறுத்தார். ஒரு படுக்கையறை வீட்டில் உள்ள நான் எப்படி, ஜாக்குலினுக்கு 3 படுக்கையறை வீட்டைப் பரிசளிப்பேன் என லாஜிக் விளக்கமளித்தார் சல்மான்.

காதல் பரிசுகள்...

சல்மானின் காதல் பரிசுக்கள் குறித்த சர்வேயில் மீண்டும் நினைவுக்கு வந்தார் அசின். அப்போது சல்மான் பரிசளித்த வீட்டில் அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொள்வதாக செய்திகள் வெளியாயின.

மறுப்பு...

இந்நிலையில், தற்போது அத்தகவலை அசினின் உதவியாளர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அ ர் கூறுகையில், ‘அசினுக்கு சல்மான்கான் வீடு ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பது பழைய வதந்தி.

வதந்தி...

‘லண்டன் டிரீம்ஸ்' படத்தில் நடித்தபோது இது வெளியானது. இப்போது மீண்டும் அந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதில் உண்மை இல்லை.

நண்பர்கள் தான்...

அசினும் சல்மான்கானும் நல்ல நண்பர்கள். அசினுக்கு சல்மான்கான் வீடு எதுவும் வாங்கி கொடுக்கவில்லை.

சட்டப்படி நிரூபணம்....

இதை சட்டப்படி தன்னிடம் உள்ள தஸ்தாவேஜுகள் மூலம் அவரால் நிரூபிக்க முடியும்' என இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

 

Post a Comment