சிவகுமார் பேரை சூர்யாவே கெடுத்திடுவார் போலிருக்கே! - பார்த்திபனின் திடுக் கமெண்ட்

|

சில பத்திரிகைகள்ல, செய்தியின் தலைப்புக்கும் உள்ளே இருக்கிற சமாச்சாரத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ச்சும்மா வாசகர்களைப் பிடித்து உள்ளே இழுக்கும் உத்தியாக தலைப்பை வைத்திருப்பார்கள். நாலு முறை படித்தும் புரியாமல் மண்டை காய்ந்து வெளியேறுவார்கள் வாசகர்கள்.

இயக்குநர், நடிகர், அவ்வப்போது 'கிறுக்கர்' என அவதாரமெடுக்கும் பார்த்திபனும் இந்த உத்தியை அவ்வப்போது பயன்படுத்துவார்.

சிவகுமார் பேரை சூர்யாவே கெடுத்திடுவார் போலிருக்கே! - பார்த்திபனின் திடுக் கமெண்ட்

அப்படித்தான் இன்று அஞ்சான் இசை வெளியீட்டு விழா மேடையில் அவர் உச்சரித்த ஒரு வாக்கியம், வந்திருந்த சூர்யா ரசிகர்களை துணுக்குற வைத்தது.

அவர் சொன்னது இதுதான்:

'போற போக்கைப் பார்த்தா சிவகுமார் சாரோட பேரை சூர்யா கெடுத்துடுவார் போலிருக்கு' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அடுத்து அவர் பேசியதற்கும் இந்த கமெண்டுக்கும் சம்பந்தமே இல்லை.

எனக்குத் தெரிஞ்சி, சினிமாவுல ரொம்ப அடக்கமானவர், பண்பானவர், அமைதியானவர்னா அது சிவகுமார் சார்தான். போற போக்கைப் பார்த்தா சிவகுமார் சாரோட பேரை சூர்யா கெடுத்துடுவார் போலிருக்கு.

ஆனா வரவர அவரை ஓவர்டேக் பண்றதே சூர்யாவோட வேலையா போச்சி.

எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் நான் ஓரமா போய் உட்காந்திடுவேன். யார்கிட்டேயும் போய் கைகுடுக்க தயக்கமா இருக்கும்.

ஆனா ரெண்டு மூணு நிகழ்ச்சியில பார்க்கிறேன். நான் எங்கேயாவது உட்கார்ந்திருப்பேன். சூர்யா நான் இருக்கும் இடம் தேடி வருவார். சார் எப்படி இருக்கீங்கன்னு விசாரிச்சி கை கொடுப்பார். இது சூர்யாதானான்னு ஆச்சர்யமா இருக்கும். அவர் இருக்கும் உயரத்துக்கு ஏற்ற உயர்ந்த பண்பு இது. அவர் மேலும் மேலும் உயர்வார்," என்றார்.

 

Post a Comment