சன் டிவியின் வம்சம் தொடரில் கடந்த 10 எபிசோடுகளாகவே கதாநாயகி ரம்யாகிருஷ்ணனின் திருமணம் பற்றிய கதைதான். அதுவும் மூன்று நாட்களாக மணமேடையில் உட்கார்ந்திருக்கும் காட்சிதான் ஒளிபரப்பாகிவருகிறது.
கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் இயக்குநரும், கிரியேட்டிவ் ஹெட்டும் குழம்பி சீரியலை பார்ப்பவர்களையும் வெறுப்பேற்றி வருகின்றனர்.
குடும்பத்தை சேர்க்க வந்த சக்தி
சென்னையில் வசித்த சக்தி தன்னுடைய தாய்மாமன் குடும்பத்தை தன் தாயுடன் சேர்த்து வைக்க வேலைக்காரியாக திருநெல்வேலிக்கு வருவதில் தொடங்கிய கதை இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது.
விஜயகுமார் - வடிவுக்கரசி
சீரியல் தொடக்கத்தில் என்னவோ நன்றாகத்தான் போனது. போலீஸ் கமிஷனர் வெற்றிவேல் அண்ணாச்சியாக விஜயகுமாரும், வில்லி நாகவல்லியாக வடிவுக்கரசியும் நடித்தனர்.
குடும்பத்தை கெடுப்பதுதான்
அண்ணாச்சி குடும்பத்தை எப்படியாவது கெடுக்கணும் என்று கூறி வில்லத்தனம் செய்த வடிவுக்கரசி ஜெயிலுக்குப் போய்விட்டார்.
விரட்டப்பட்ட கதாபாத்திரங்கள்
கதாநாயகியின் பெற்றோர்களை விபத்தில் சாகடித்துவிட்டனர். அண்ணாச்சி குடும்பத்தில் அத்தை தங்கம்மாவைத்தவிர இப்போது யாரையும் காணோம். அதேபோல நாகவல்லி குடும்பத்தில் ரமாமணி மட்டுமே சக்தியுடன் இருந்து வில்லத்தனம் செய்கிறாள்.
எத்தனை மாப்பிள்ளைகள்
சீரியலின் ஆரம்பத்தில் ஒரு மாப்பிள்ளை, அத்தைப் பையனின் காதல், முறைப்பையன் பொன்னுரங்கம், டாக்டர் மதன் என நான்கு மாப்பிள்ளைகள் வரிசையாக சக்திக்கு வந்தாலும் தாலி கட்டுவது யார் என்பதில்தான் குழப்பமே.
புதிதாக வந்த பொன்னுரங்கம்
தொடரில் இருந்து இயக்குநரை மாற்றியதால் புதிதாக ஒரு கிளைக்கதை சொருகி பெரிய அத்தை மகனாக பொன்னுரங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவரும் ரமாமணி புண்ணியத்தில் காதலிக்க சக்திதான் தனது மனைவி என்று நினைத்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
டாக்டர் மாப்பிள்ளை
சக்திக்கு தான் மாப்பிள்ளை இல்லை டாக்டர்தான் மாப்பிள்ளை என்று தெரியவரவே அரைமனதோடு விட்டுக்கொடுக்கிறார். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் சக்திதான் உன் மனைவி என்று கூறி பொன்னுரங்கத்தை ஆறுதல்படுத்துகின்றனர்.
மணமேடையில் எத்தனைநாள்
இதோ அதோ என்று இழுத்து இப்போது மணமேடை வந்துவிட்டது சக்தியின் திருமணம். இடையில் டாக்டர் மாப்பிள்ளை மதன் திருமணம் செய்த மலைதேசத்துப் பெண் பூமிகாவைப் பற்றிய கிளைக்கதை வேறு ஓடுகிறது.
நிற்குமா? நடக்குமா?
டாக்டரைத் தேடி வந்த பூமிகா உண்மையை சொல்லுவாளா? போலீஸ் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி திருமணத்தை நிறுத்துவாரா?. காணாமல் போன பொன்னுரங்கம் வந்துவிடுவாரா? இல்லையென்றால் ஆசைப்பட்டது போல டாக்டரே ரம்யா கிருஷ்ணன் கழுத்தில் தாலி கட்டிவிடுவாரா?
போரடிக்குதுப்பா
யாரா இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் தாலி கட்டுங்கப்பா போரடிக்குதுல்ல... கல்யாண சீனையே 15 நாள் காட்டுனா யாரு பார்ப்பாங்க என்பது தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களின் கருத்தாகும்.
பாதியில் நிறுத்திய ரம்யா
ரம்யா கிருஷ்ணன் தனது முந்தைய சீரியலான ராஜகுமாரியை எப்படி நகர்துவது என்று தெரியாமல் பாதியில் நிறுத்தினார். அதே கதி இந்த தொடருக்கு வரும்முன் கதையை வேறு களத்திற்கு மாற்றுவதே நல்லது என்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.
+ comments + 2 comments
Not only this serial , most of the tamil tv serials are like this, I didn't see any intelligent tamil serial writers or directors ,only we can see "Aptham", Mudalthanam", and "Araivetkaaduthanam"through this serials , the viewers are fools.
thayumanvan and office are other serial which is boring with combination of lot of small stories
Post a Comment