வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை நாயகன் தனுஷை விட, வில்லன் அமிதேஷ்தான் சந்தோஷமாகக் கொண்டாடி வருகிறார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் மும்பையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர்.
இப்போது சென்னையில் வசித்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத்தின் நெருங்கிய நண்பர் இவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கம்போல, ஒரு சரக்குப் பார்ட்டியில் வைத்து அமிதேஷை தனுஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாராம் தனுஷ்.
உடனே, ‘வேலையில்லா பட்டதாரி' படத்தில் வில்லன் வேடத்தில் அமிதேஷை ஒப்பந்தம் செய்தார் தனுஷ் (படத்துக்கு கிட்டத்தட்ட 'கோஸ்ட் டைரக்டர்' என்பதால் தனுஷ் என்ன சொன்னாலும் மறுப்பில்லை!)
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமிதேஷ், படத்தின் வெற்றி குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "அறிமுகமானது வில்லன் வேடத்தில் என்றாலும், எந்த மாதிரி வேடத்திலும் நடிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்கு முதல்படியாகத்தான் வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டேன்," என்றார்.
இவரது வில்லன் நடிப்பை தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டினார்களாம்.
Post a Comment