அஞ்சான்.. பிரிண்டே கிடையாது.. 100 சதவீதம் டிஜிட்டல் ரிலீஸ்!

|

திருட்டு டிவிடியைத் தடுக்கும் முயற்சியாக, 100 சதவீதம் டிஜிட்டலிலேயே வெளியாகிறது சூர்யாவின் அஞ்சான்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

ஆனால் எல்லா பகுதிகளிலுமே இந்தப் படம் டிஜிட்டல் முறையில் மட்டுமே திரையிடப்படுகிறது. தமிழகம் உள்பட எந்த அரங்கிலும் பிலிம் பிரிண்ட் மூலம் திரையிடப்பட மாட்டாது.

அஞ்சான்..  பிரிண்டே கிடையாது.. 100 சதவீதம் டிஜிட்டல் ரிலீஸ்!

திருட்டு வீடியோவைத் தடுக்கவே இந்த முயற்சியாகும். ஒருவேளை யாராவது இந்தப் படத்தை திருட்டு வீடியோவாக பதிவு செய்தாலும் எளிதில் பிடிபட்டு விடக்கூடிய வகையில் ரகசிய குறி எண் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இதுபோல டிஜிட்டலில் வெளியாகும் முதல் பெரிய படம் அஞ்சான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் மிகப்பெரிய துவக்க வசூலைக் குவிக்கும் என தயாரிப்பாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

 

Post a Comment