33 வயசாச்சு.. மாப்பிள்ளை சிக்கலையே!.. காளகஸ்தி பூஜைக்குத் தயாராகும் நடிகை!!

|

பிக்கப் டிராப் நடிகரைப் போலவே அவருடன் செகண்ட் வேர்ல்ட் படத்தில் நடித்த குதிரை நடிகைக்கும் இன்னும் திருமணம் கை கூடவில்லையாம்.

33 வயதில் அவர் நின்றிருப்பதால், வயது முதிர்ச்ச முகத்தில் தெரிய ஆரம்பித்து விட்டது. இதையடுத்து வீட்டில் வேகமாக வரன் தேடும் படலத்தைத் தொடங்கினர். ஆனால், வீட்டிற்குப் பிடித்த மாப்பிள்ளையை நடிகைக்குப் பிடிக்கவில்லை, நடிகைக்கு பிடிக்கும் மாப்பிள்ளையை வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை.

கிட்டத்தட்ட கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாகிப் போனது.

இப்படியாக ஒவ்வொரு வரனாக தள்ளிப் போவதால் கலக்கமடைந்த நடிகையின் குடும்பத்தார், இது தொடர்பாக ஜோசியம் பார்த்துள்ளனர். அப்போது நடிகைக்கு ஏதோ தோஷம் இருப்பதாகவும், அதனால் தான் வரன்கள் தள்ளிப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காளகஸ்தி கோவிலில் பூஜை ஒன்றை செய்யும் படியும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். எனவே, விரைவில் நடிகையை அவரது குடும்பத்தாருடன் காளகஸ்தியில் எதிர்பார்க்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு கூட புத்த நடிகரும், அவரது தோழி நடிகையும் கூட இப்படித்தான் காளஹஸ்திக்கு வந்து பூஜை செய்து விட்டுப் போனார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.. குதிரையாருக்கும் அங்கு போனதும் நல்லது நடந்தால் சரிதான்.

 

Post a Comment