பிரேம்ஜி பாகவதராக நடிக்கும் மாங்கா!

|

பிரேம்ஜி அமரன் பாகவதர் வேடத்தில் நடிக்கும் மாங்கா படம் வெளியீட்டுக்குத் தயாராகிறது.

ட்ரீம்ஜோன் மூவிஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரேம்ஜிதான் ஹீரோ. கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார். லீமா, இளவரசு, ரேகா, மனோபாலா, தென்னவன், டி.பி.கஜேந்திரன், வெங்கல்ராவ், லேடி ரஜினி ஆகியோர் நடிக்கிறார்கள் .

பிரேம்ஜி பாகவதராக நடிக்கும் மாங்கா!  

பிரேம்ஜி ஹீரோவாக நடிப்பதும், படத்தின் இசையையும் அமைத்துள்ளார். கங்கை அமரனும் சினேகனும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆர் எஸ் ராஜா.

படம் குறித்து இயக்குநர் ராஜாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், "விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல. அப்படி அவர் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள் பலரது பார்வையில் விநோதமாக தெரிகிறது.

ஒரு முறை அவர் பாகவதர் ஒருவரைச் சந்திக்கிறார். 1950ம் ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவர் அந்த பாகவதர். இருவருக்கும் இடையே ஒரு நட்பு உண்டாகிறது. இதையெல்லாம் காமெடி கலந்து சொல்கிறோம். முழுக்க முழுக்க காமெடிதான்.

பிரேம்ஜி நல்லாவே காமெடி பண்ணுவார். இதில் முழு ஹீரோ என்பதால் தூள் கிளப்பி இருக்கிறார். படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து விட்டன.

பிரேம்ஜி இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விரைவில் இசை வெளியீட்டு விழா நடை பெறவுள்ளது," என்றார்.

 

Post a Comment