பலாத்காரம்: பெங்களூர் பந்த்தைத் தொடர்ந்து கன்னட திரையுலகினரும் பந்த்?

|

பெங்களூர்: பெண்களுக்கு எதிராக பெங்களூரில் அதிகரித்துவரும் கொடுமைகளுக்காக கன்னடத் திரையுலகினர் தனியாக ஒரு பந்த் நடத்தத் தீர்மானித்துள்ளனராம்.

பலாத்காரம்: பெங்களூர் பந்த்தைத் தொடர்ந்து கன்னட திரையுலகினரும் பந்த்?

நேற்றுதான் பெங்களூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாலியல் பலாத்கார செயல்கள் அதிகரிப்பைக் கண்டித்து பந்த் நடந்தது. இதற்குப் பரவலாக ஆதரவு காணப்பட்டது. இந்த நிலையில் திரையுலகினர் ஒரு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று மாலை கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவரான ஹெச்டி. கங்காராஜூ பத்திரிக்கையாளார்களிடம் இச்செய்தியை தெரிவித்தார். அதில், கன்னடத் திரையுலகம் (நேற்று நடந்த) இந்த போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். ஆனால், தாங்கள் இந்த போராட்டத்தில் தனியாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நடிகர் ரவிச்சந்திரன் நேற்று தனது அபூர்வா படத்தின் படபிடிப்பினை இப்போராட்டத்திற்காக ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment