கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

|

விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கத்தி படத்துக்கு தன் அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான்.

மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் இது பெரிய ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட வில்லை. ஆனால் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் இது பெருத்த அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

கத்தி படத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், அந்தப் பட நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லைகா நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறாராம். இது ஏற்கெனவே விஜய், ஜெயம் ரவி போன்றவர்கள் நடிப்பதாக இருந்த பகலவன் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

லைகாவுக்காக படம் இயக்கும் வாய்ப்பை சீமானுக்குப் பெற்றுத் தந்தவர் ஏ ஆர் முருகதாஸ்தான் என்பது கூடுதல் தகவல்!

 

+ comments + 1 comments

Anonymous
8 August 2014 at 20:56

It its true , surely it will damage the image of the seeman, one think our elam Tamils must realize only very few indian politicians in tamilnadu, are genuinely has sympathies about us but most of them are useing our problem for there politics and popularity. Most of the tamil cinema industry people useing us for there business because we are people promote there business in Europe and North America , they are simply enjoying there business in our madness. When our people will realize this reality?

Post a Comment