எனக்கு 'அது' வேணவே வேணாம்ப்பா... லட்சுமி மேனன் அதிரடி!

|

சென்னை: தமிழ் திரை உலகில் இளம்வயது நடிகையான லட்சுமி மேனன் தற்போது "தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை" என்ற திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கும்கி படத்தில் அறிமுகமானபோதே "நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன்" என்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். அப்போதே அட ரொம்ப வெவரமாகத்தான் இருக்கிறார் லட்சுமி என்று பலரும் கலாய்த்தனர்.

எனக்கு 'அது' வேணவே வேணாம்ப்பா... லட்சுமி மேனன் அதிரடி!

9 ஆவது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர் இப்போது 11ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் "திருமணமே செய்து கொள்ள மாட்டேன்" என்று திடீர் முடிவெடுத்திருக்கிறார்.

தான் திருமணம் செய்து கொள்ளவே போவதில்லை. கல்யாணம் செய்து கொள்ளாமல் பலபேர் சாதித்துள்ளனர். தனக்கு மிகவும் பிடித்த சித்தார்த்துடன் நடித்து விட்டதாகவும், அடுத்து விஜய், அஜித், மம்முட்டியுடன் நடிக்க வேண்டும் என்று நிறைய கனவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் லட்சுமி மேனன்.

மொதல்ல பிளஸ் 1 படிச்சு முடிக்கற வழியைப் பாருங்க அப்புறமா இதைப்பத்தியெல்லாம் பேசிக்கலாம் என்கின்றனராம் சில திரையுலகினர்.

 

Post a Comment