நெல்லைத் தமிழ் பேசும் கமல்... படத்துக்கு தலைப்பு பாபநாசம்!

|

கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படத்துக்கு பாபநாசம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் இது.

இந்தப் படத்தில் கமல் ஹாஸன் நெல்லைத் தமிழில் பேசி நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் சென்னைத் தமிழ், கொங்கு தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் என தமிழை வண்ணமயமாகப் பேசி அசத்தியவர் கமல்.

நெல்லைத் தமிழ் பேசும் கமல்...  படத்துக்கு தலைப்பு பாபநாசம்!

இந்தக் கதை முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு நிகழ்வது போல மாற்றப்பட்டுள்ளது. எனவே படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைவருமே நெல்லைத் தமிழ் பேசப் போகிறார்களாம்.

பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடிக்கிறர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, குற்றாலம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ளது. இந்த மாதம் 19-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் என இதுவரை எடுக்கப்பட்ட அத்தனை மொழிகளிலும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்தான் தமிழிலும் இயக்குகிறார்.

 

Post a Comment