நவம்பர் 17-ம் தேதி முதல் மீண்டும் சினிமா மேக்கப்பைப் போட ஆரம்பிக்கிறார் நடிகை ஜோதிகா.
இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் மலையாளத்தில் இயக்கி பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹவ் ஓல்ட் ஆர் யு. இந்தப் படத்தைத்தான் தமிழில் படமாகத்குகிறார்கள். மலையாளத்தில் இயக்கிய ரோஷன்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.
சென்ன, டெல்லி, ராஜஸ்தான் போன்ற இடங்களில் படமாகும் இந்தப் படத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரவேசம் செய்கிறார் ஜோதிகா.
அவருக்கு கணவராக நடிக்கிறார் ரகுமான்.
மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், அவரை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்த படம் ஹவ் ஓல்ட் ஆர் யு. இப்போது ஜோதிகா தனது சினிமா மறுபிரவேசத்தை அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment