பரபரவென முன்னேறி வந்தார் விஜய் சேதுபதி. ஆனால் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என இரு படங்கள் அடுத்தடுத்து விழுந்ததில், மார்க்கெட் ஆடிப் போனது.
இப்போது வன்மம், இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, புறம்போக்கு, நானும் ரௌடிதான் என பல படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் சில முற்றாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. ஆரஞ்சு மிட்டாய் அவரது சொந்தப் படம் வேறு.
ஆனால் எந்தப் படமும் வெளிவரும் வழியைக் காணோம்.
சரி, மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை தன்னால் நிர்ணயிக்கமுடியாது.. நம்ம சொந்தப் படத்தையாவது ரிலீஸ் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் விஜய் சேதுபதி.
நவம்பர் கடைசியில் இசை வெளியீடு, டிசம்பரில் படம் ரிலீஸ் என பிளான் செய்து அதற்கான வேலைகளிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது.
வயதான தளர்வான தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. திரைக்கதையின் பலம் படத்தை பெரிதாகப் பேச வைக்கும் என ந்புகிறார்கள். இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவரும் விஜய் சேதுபதிதான் என்பது கூடுதல் தகவல்!
Post a Comment