லிங்கா இசை... நவம்பர் 9-ம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கிறது!

|

நவம்பர் 9-ம் தேதி ரஜினியின் லிங்கா பட இசை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தின் ஒரு பாடல் தவிர மற்றெல்லா காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன.

லிங்கா இசை... நவம்பர் 9-ம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கிறது!

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரஜினியின் பிறந் நாளன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

லிங்காவின் இசை வெளியீடு திபாவளி நாளில் நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் அன்று படத்தின் அதிரடி போஸ்டர் மட்டும் வெளியானது. நவம்பரில்தான் இசை வெளியாகும் என்றனர் தயாரிப்பாளர் தரப்பில்.

இப்போது தேதியை உறுதி செய்துள்ளனர். வரும் நவம்பர் 9-ம் தேதியன்று சத்யம் திரையரங்கில் லிங்கா படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இசை வெளியீட்டைக் கொண்டாட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.

 

Post a Comment