அனிருத்துக்கு ப்யானோ பரிசளித்த விஜய்

|

கத்தி படத்துக்கு அனிருத் அமைத்த இசை எங்கிருந்து சுடப்பட்டது என்றெல்லாம் ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அவரது இசை படத்தின் நாயகன் விஜய்க்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.

பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டது. படமும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனிருத்துக்கு ப்யானோ பரிசளித்த விஜய்

இந்த சந்தோஷத்தில் அனிருத்துக்கு ஒரு பரிசு வழங்கியுள்ளார் விஜய். ஒரு காஸ்ட்லியான பியானோவை வாங்கிப் பரிசாக அளித்துள்ளார்.

இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் அனிருத்.

இதுபற்றி அவர் கூறுகையில், "நன்றி விஜய் சார். இந்த புதிய பியானோ மிகவும் அழகாக இருக்கிறது. கத்தி படத்தின் மிகப்பெரிய வெற்றி, அதோடு இந்த பியானோ எனக்கு கத்தி படத்திற்காக கிடைத்த இரண்டாவது பரிசு," என்று தெரிவித்துள்ளார்.

விஜய் தந்த ப்யானோவுடன் போஸ் கொடுத்தபடி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

Post a Comment