கத்தி ரிலீஸ் பிரச்சினை இன்று சுமூகமாக முடியும் என லைகா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
லைகா நிறுவனத்தின் கத்தி படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதை தமிழ் அமைப்புகள், திருமாவளவன் மற்றும் மாணவர் அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
படம் வெளியாகும் தியேட்டர்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு தேதியும் வெளியான நிலையில், எதிர்ப்பு நிலையிலிருந்து போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை.
இந்த நிலையில் படத்தை சுமுகமாக வெளியிட, தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்ங்கரன் கருணாமூர்த்தியுடன் கடந்த இரு தினங்களாக சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சு நடத்தி வருகிறார்.
இதுகுறித்து லைகா நிறுவனத் தரப்பில் விசாரித்தபோது, 'படம் நிச்சயம் வெளியாகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்று அனைத்து விஷயங்களும் சுமூகமாக முடிந்துவிடும். ரிசர்வேஷன் விரைவில் தொடங்கும்,' என்று தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 400 அரங்குகளில் கத்தி வெளியாகிறது.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் அதிக அரங்குகளில் படம் வெளியாகிறுது. அதற்கான பிரதிகள் நேற்று மாலையே அனுப்பப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment