பொங்கலுக்குத்தான் லிங்கா.. ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீடு?

|

ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட லிங்கா படம், பொங்கலுக்கு தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.

பொங்கலுக்குத்தான் லிங்கா.. ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீடு?

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் முடிவடையை திட்டமிட்டதை விட அதிக நாட்கள் தேவைப்படுகின்றன.

டிசம்பர் 12, ரஜினி பிறந்த தினத்தில் படத்தை வெளியிடவும், அதற்கு முன் தீபாவளிக்கு பாடல்களை வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லாத நிலை.

பணிகள் இன்னும் முழுமையடையாததால் ஒரு மாதம் கழித்து பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் லிங்கா பாடல் வெளியீடு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

Post a Comment