ரஜினியின் லிங்கா பட இசை வெளியீடு வரும் 16-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டது. படத்தின் பாடல்கள் அடங்கிய மாஸ்டர் சிடியை தர ஏஆர் ரஹ்மான் தரப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேதி தள்ளிப் போனதாக தகவல் கசிந்துள்ளது.
ரஜினியின் லிங்கா ஆடியோ கடந்த தீபாவளி தினத்தன்றே வெளியாகும் என தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறியிருந்தார். ஆனால் அன்றைக்கு வெளியாகவில்லை.
சமீபத்தில் படத்தின் டீசர் மட்டும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இசை வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் ராக்லைன் வெங்கடேஷ். நவம்பர் 9-ம் தேதி சத்யம் அரங்கில் இசை வெளியீடு நடக்கும் என அறிவித்திருந்தார்.
ஆனால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தின் பாடல்கள் அடங்கிய மாஸ்டர் காப்பி தருவதில் தாமதம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இசை வெளியீட்டை மேலும் ஒரு வாரம் தள்ளிப் போட்டுவிட்டனர்.
இப்போது நவம்பர் 16-ம் தேதியை புதிய ஆடியோ ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளனர். அதே சத்யம் அரங்கில் நிகழ்ச்சி நடக்கப் போகிறது.
Post a Comment