2015ல் கன்னட தயாரிப்பாளரை மணக்கும் நடிகை பாவனா?

|

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கன்னட பட தயாரிப்பாளரான நவீனை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

16 வயதில் நடிகையானவர் பாவனா. மலையாள படங்களில் நடித்து வந்த அவர் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கன்னட திரை உலகிற்கு சென்றார். அங்கு அவர் நடித்த ரோமியா என்ற படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான நவீன் என்பவரை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பாவனாவோ தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணத்திற்கு முந்தைய மாதம் தான் அவரின் பெயரை தெரிவிப்பேன் என்றும் கூறினார். நவீனும் பாவனா என் தோழி மட்டுமே என்றார்.

2015ல் கன்னட தயாரிப்பாளரை மணக்கும் நடிகை பாவனா?

இதற்கிடையே பாவனா மலையாள நடிகர் அனூப் மேனனை காதலிப்பதாக பேச்சாக கிடந்தது. திருவனந்தபுரம் லாட்ஜ், ஆங்க்ரி பேபீஸ் ஆகிய படங்களில் அனூப் மற்றும் பாவனா சேர்ந்து நடித்தனர். தங்களுக்குள் காதல் இல்லை என்றும், நாங்கள் நல்ல நண்பர்கள் என்றும் அவர்கள் கூறியதை யாரும் நம்பவில்லை.

கிசுகிசு அடங்காத நிலையில் அனூப் மேனனோ தான் திரை உலகை சேராத ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாவனாவும், நவீனும் நண்பர்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி காதலர்களாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது. வரும் ஜனவரி மாதம் பாவனாவின் சகோதரரின் திருமணம் முடிந்த பிறகு திருச்சூரில் அவர்களின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment