தமிழகத்தில் 650 அரங்குகளில் லிங்கா ரிலீஸ்

|

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் தமிழகத்தில் 650 அரங்குகளில் லிங்கா ரிலீஸ்  

ரஜினி படங்கள் வெளியாகும்போது, தமிழகத்தின் 90 சதவீத அரங்குகளில் அந்தப் படமே வெளியாகும் என்ற நிலை பாபா சமயத்திலிருந்து உருவாகியுள்ளது.

எந்திரன் படம் வெளியானபோது, தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகள் அந்தப் படத்துக்கே தரப்பட்டன.

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் ரஜினியின் லைவ் ஆக்ஷன் படம் வெளியாகிறது என்பதால், தமிழகத்தின் அனைத்து அரங்குகளும் அந்தப் படத்தை வாங்கி திரையிட ஆர்வம் காட்டியுள்ளன. இரண்டு அல்லது மூன்று அரங்குகள் மட்டுமே கொண்ட சிறு நகரங்களில், அனைத்து அரங்குகளிலும் லிங்காவை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் அதிகபட்சமாக 65 அரங்குகளில் லிங்கா திரையிடப்பட உள்ளது. பிவிஆர், ஐநாக்ஸ், மாயாஜால் போன்ற அரங்குகளில் அனைத்து திரைகளும் இந்தப் படத்துக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 650 அரங்குகளில் லிங்கா வெளியாகும் என்று இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங்க மேலும் 50 அரங்குகள் வரை அதிகரிக்கும் நிலை உள்ளது.

 

Post a Comment