சிம்பு, நயன் மாதிரி ஆகப் போகும் ஆலியா பட், வருண் தவான்?

|

சென்னை: முன்னாள் காதலர்களான ஆலியா பட் மற்றும் வருண் தவான் ஆகியோர் ஒன்று சேர்ந்து நடிக்க உள்ளார்களாம்.

பாலிவுட்டின் இளம் கனவுக் கன்னியான ஆலியா பட், வருண் தவான் சேர்ந்து ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹனியா படத்தில் நடித்தனர். அதில் அவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. மேலும் அவர்களுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இருவரும் சில காலம் கைகோர்த்து காதல் பறவைகளாக சுற்றி வந்தனர். இந்நிலையில் தான் வருணுக்கு தனது முன்னாள் காதலி நினைவு வந்து அவருடன் சேர ஆலியாவை பிரிந்து சென்றுவிட்டார்.

சிம்பு, நயன் மாதிரி ஆகப் போகும் ஆலியா பட், வருண் தவான்?

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் படத்தில் ஆலியாவும், வருணும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்களாம். படத்தை அவர்களை ஏற்கனவே இயக்கிய ஷஷாங்க் கைத்தான் தான் இயக்க உள்ளாராம்.

சரி ஆலியாவுக்கும் சிம்பு, நயனுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம். முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள் அல்லவா அது போன்று தானே ஆலியாவும், வருணும் நடிக்க உள்ளனர். அது தான் அப்படி தலைப்பு.

முன்னதாக தீபிகா படுகோனே தனது முன்னாள் காதலரான ரன்பீர் கபூருடன் சேர்ந்து நடித்த படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment