சினிமாவில் கஷ்டப்பட்டேன் கஷ்டப்பட்டேன்னு யாரும் புலம்பாதீங்க... சினிமா மட்டுமல்ல, எல்லா தொழில்களிலும் கஷ்டப்பட்டாத்தான் வெற்றி வரும் என்றார் விஜய் சேதுபதி.
'1பந்து 4ரன் 1விக்கெட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி அழைக்கப்பட்டிருந்தார். இந்த விழாவில் படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்று பேசினார்கள். பேசிய அனைவருமே விஜய் சேதுபதி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தெரியும், அவர் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் வாழ்வில் பல நாட்கள் கஷ்டபட்டதுதான் என்று விஜய் சேதுபதியை வாழ்த்திப் பேசினார்கள்.
அடுத்து பேச வந்த விஜய் சேதுபதி, ‘படம் வெற்றியடைய இயக்குனர் வீராவுக்கு வாழ்த்துகள். வாழ்வில் எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள். கஷ்டப்பட்டால்தான் வாழ முடியும்.
சினிமாவில் மட்டுமல்ல, மற்ற தொழில்களும் அப்படித்தான். அதனால், கஷ்டப்பட்டேன்... கஷ்டப்பட்டேன்... என யாரும் புலம்ப வேண்டாம். கஷ்டப்பட்டாதான் வெற்றி வரும்.
நமக்கான வேலையை நாம் செய்துகொண்டே இருப்போம். வெற்றி வரும், போகும் ஆனால் நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்,' என்றார்.
Post a Comment