தமிழில் ஜோதிகாவுடன் 'ரீ என்ட்ரி' கொடுக்கும் அபிராமி!

|

தமிழில் சமுத்திரம், வானவில், விருமாண்டி போன்ற வெற்றிப் படங்களில் நடித்த அபிராமியை நினைவிருக்கிறதா..

சில ஆண்டுகள் காணாமல் போயிருந்த அபிராமி, மீண்டும் மலையாளப் படங்களில் தலை காட்ட ஆரம்பித்தார். இப்போது தமிழ்ப் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழில் ஜோதிகாவுடன் 'ரீ என்ட்ரி' கொடுக்கும் அபிராமி!

ஜோதிகா நடிக்கும் ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் அபிராமி ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் சமீபத்தில் தொடங்கியது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பில் அபிராமியும் இணைகிறார். ஜோதிகாவுக்கு தோழியாக அவர் வருகிறார். மலையாளத்தில் இந்தப் பாத்திரத்தில் கனிகா நடித்திருந்தார். ஜோதிகாவுக்கும் இந்தப் படம்தான் ரீ என்ட்ரி.

கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தில் அபிராமி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment