அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை அறிந்தால்.
இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கடந்த மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் ஐ உள்பட மேலும் 3 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், என்னை அறிந்தால் வருமா என்ற கேள்வி இருந்தது.
இப்போது என்னை அறிந்தால் படம் திட்டமிட்டபடி பொங்கல் ஸ்பெஷலாக வரப்போவது உறுதியாகிவிட்டது.
வரும் ஜனவரி 14-ம் தேதி தை முதல் நாளில் என்னை அறிந்தால் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அட்மஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. வெளிநாடுகளில் ஒரு நாள் முன்பாகவே என்னை அறிந்தால் வெளியாகவிருக்கிறது.
Post a Comment