யோகி தேவராஜின் 30வது படம் 'கயல்' - கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!

|

பத்திரிகையாளர் யோகி தேவராஜ் ஒரு நடிகராக 30 படங்களை முடித்துவிட்டார். பிரபு சாலமன் இயக்கியுள்ள கயல் அவருக்கு 30 வது படம். முக்கியமான வேடம்.

2009 நவம்பர் மாதம் ரிலீசான 'யோகி' படத்தில் வில்லத்தனமான வேடத்தில் நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் தேவராஜ். அன்றிலிருந்து அவர் யோகி தேவராஜாகிவிட்டார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ், நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன.

யோகி தேவராஜின் 30வது படம் 'கயல்' - கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!

இதுவரை நான் நடித்த படங்கள் குற்றப்பத்திரிகை, சூர்யா, ஜெர்ரி, ராம், யோகி, விலை, நானே என்னுள் இல்லை, முத்துக்கு முத்தாக, அழகர்சாமியின் குதிரை, முதல் இடம், தேரோடும் வீதியிலே, என் பெயர் குமாரசாமி, முப்பொழுதும் உன் கற்பனைகள் (இவரது காட்சிகள் இடம்பெறவில்லை), அமரா, ஒத்தவீடு, கம்பன் கழகம், வன யுத்தம் (தமிழில் இவரது காட்சிகள் இடம்பெறவில்லை), அட்டஹாசா, 'வன யுத்தம்' படத்தின் கன்னடப் பதிப்பு), ஒரு நடிகையின் வாக்குமூலம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், அழகன் அழகி, பொன்னர் சங்கர், நீர்ப்பறவை, சொகுசு பேருந்து, நெல்லை சந்திப்பு, ஒன்பதுல குரு, உ, பாலக்காட்டு மாதவன், ஆக்கம், கயல்,சதுரன்.

யோகி தேவராஜின் 30வது படம் 'கயல்' - கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!

இதுகுறித்து தேவராஜ் கூறுகையில், "5 ஆண்டுகளில் சிறியதும் பெரியதுமாக 30 படங்கள் முடித்துவிட்டேன். இத்தனை படங்களில் நான் நடித்து இருந்தாலும், மிகப் பெரிய திருப்புமுனையோ அல்லது மிகச் சிறிய திருப்புமுனையோ கிடைக்கவில்லை. என்றாலும், 'கயல்' படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் என்னை நம்பி கொடுத்த கேரக்டரின் தன்மையைக் கெடுக்காமல் நடித்து இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு சரியான திருப்பு முனையைத் தரும் என நம்புகிறேன்.

எப்போதும் போல் அனைத்து நண்பர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

 

Post a Comment