மும்பை: ஆமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பி.கே. படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.92.50 கோடி வசூல் செய்துள்ளது.
ஆமீர் கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தி படம் பி.கே. ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இந்த படம் ரிலீனான அன்று மட்டும் ரூ.26.6 கோடி வசூல் செய்தது. மறுநாள் காலையில் தியேட்டர்கள் காத்து வாங்கிய போதிலும் மதியம் மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள் காட்டிய ஆர்வத்தால் இரண்டாவது நாள் வசூல் மட்டும் ரூ.29.50 கோடி ஆனது.
ஞாயிற்றுக்கிழமை வந்தால் தியேட்டர்களில் நிச்சயம் கூட்டம் குவியும். பி.கே. படம் பற்றி விமர்சகர்கள் வேறு புகழ்ந்து தள்ளினர். இது தவிர படத்தை பார்த்தவர்கள் வேறு சமூக வலைதளங்களில் அதை புகழ்ந்ததுடன் அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் என்று ஒரு பிட்டை போட்டனர்.
இதனால் பி.கே. படம் நேற்று மட்டும் ரூ.37 கோடி வசூல் செய்துள்ளது. ஆக படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.92.50 கோடி வசூல் செய்துள்ளது. படம் நிச்சயம் இன்று ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடிப்பில் அசத்துவதற்கு பெயர்போனவர் ஆமீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment