பிக்கப் டிராப் ஹீரோவா?: அய்யய்யோ, செவத்த பொண்ணுக்கு கிலியை கிளப்பிய தோழிகள்

|

சென்னை: சிவத்த பொண்ணு நடிகை தான் நடிக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங்கிற்கு 6 பாதுகாவலர்களுடன் வருகிறாராம்.

சிவத்த பொண்ணு நடிகை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் 2 பெரிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் காமெடிக்கு பெயர் போன இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். படத்தின் ஹீரோ பிக்கப் டிராப் நடிகர் என்று தெரிந்ததும் நடிகையின் தோழிகள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்களாம்.

அய்யய்யோ அந்த ஹீரோவா, பிரியாணி கிளப்பில் சேர்த்துவிடுவாரே சூதானமாக நடந்துக்கோ என்று நடிகைக்கு அறிவுரை வழங்கினார்களாம். இதை கேட்ட நடிகை ஆடிப் போய் அப்ப என்ன தான் செய்ய என்று கேட்டதற்கு தோழிகளே சூப்பர் ஐடியாவையும் அளித்துள்ளார்கள். அதாவது படப்பிடிப்பு தனியாக செல்லாதே சென்றால் அவ்வளவு தான். அதனால் பாதுகாவலர்களுடன் செல் உன் பக்கமே அவர் வர மாட்டார் என்று ஐடியா கொடுத்துள்ளனர் தோழிகள்.

நடிகையும் தோழிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு 6 பாதுகாவலர்களுடன் வருகிறாராம். நடிகர் படப்பிடிப்பு தளத்தில் கடலையில் ஆரம்பித்து பிரியாணி கிளப்பில் நடிகைகளை சேர்த்துவிடுவதால் தான் சிவத்த பொண்ணு இப்படி பாதுகாப்பாக வருகிறாராம்.

ஒரு பிக்கப் டிராப், ஒரு குட்டி பிரியாணி கிளப்புக்கு நடிகைகள் மத்தியில் இவ்வளவு பயமா?

 

Post a Comment