சென்னை: காதலர்களுக்கு இடையேயான ஈகோ போராட்டம் பற்றிய படமாம் இந்தியா பாகிஸ்தான்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படம் மூலம் ஹீரோவானார். அவர் இதுவரை நான், சலீம் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களுக்கும் அவர் தான் இசையமைத்தார்.
இந்நிலையில் அவர் தற்போது ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் படம் இந்தியா பாகிஸ்தான். அது என்ன தலைப்பு இந்தியா பாகிஸ்தான் என்று நினைக்கிறீர்களா?. காரணத்தோடு தான் அப்படி பெயர் வைத்துள்ளார்கள்.
படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்கும் சுஷ்மா நடித்து வருகிறார். காதலர்களான விஜய்க்கும், சுஷ்மாவுக்கும் இடையேயான ஈகோ பிரச்சனை மற்றும் அதன் தீர்வு தான் கதையாம். ஹீரோவும், ஹீரோயினும் எப்பொழுது பார்த்தாலும் மோதிக் கொள்வதாலேயே படத்திற்கு இந்தியா பாகிஸ்தான் என்று பெயர் வைத்துள்ளனர்.
விஜய் ஆண்டனியின் மனைவி தயாரிக்கும் இந்த படத்திற்கு தீனா தேவராஜன் இசையமைக்கிறார்.
Post a Comment