சென்னை: விஜயகாந்த் ஊர் ஊராகத் தேடி தனது மகனுக்கு ஜோடியாக அழைத்து வந்துள்ள நேஹா ஹிங்கே ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டம் வென்றவர் ஆவார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடித்து வரும் படத்தில் 2 ஹீரோயின்களாம். விஜயகாந்த் தனது மகனுக்கு ஊராக, ஊராக ஹீரோயின் தேடினார். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை நடிக்க வைக்கப் போவதாக கூட பேச்சு அடிபட்டது. ஸ்ரீதேவி தனது மகளை தற்போதைக்கு நடிக்க வைப்பதாக இல்லை. இந்நிலையில் ஜான்விக்கு ஹீரோயினுக்கான உடல்வாகு இல்லை என்று கூறி அவரை விஜயகாந்த் அன்ட் கோ நிராகரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தான் விஜயகாந்த் புனே சென்று மகனுக்கு ஏற்ற ஹீரோயினை பார்த்து அழைத்து வந்துள்ளார். அவர் தான் நேஹா ஹிங்கே. 2010ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகிப்பட்டம் வென்றவர்.
அடியாத்தி ஷம்முவ பாண்டி ஹீரோயின் முன்னாள் இந்திய அழகியா என்றால் ஆமாம் என்ற பதில் தான் கிடைக்கும். படத்தில் நேஹா தவிர தெலுங்கு நடிகையான ஷுப்ரா ஐயப்பாவும் உள்ளார்.
இங்கிட்டு நேஹா, அங்கிட்டு ஷுப்ரா கலக்குங்க பாண்டி....
Post a Comment