சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்த சமந்தா டயட்டை மறந்து சாப்பிடத் துவங்கிவிட்டார்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான சமந்தா கத்தி படம் மூலம் முதன்முதலாக தமிழில் வெற்றி கண்டுள்ளார். தற்போது அவர் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்னும் பெயர் வைக்காத தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வியாழக்கிழமை மாலை ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். தான் வளர்ந்த ஊருக்கு வந்ததும் அவர் உணவு கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆகிவிட்டது. சென்னை என்றால் கட்டுப்பாடு இல்லை. தோசை, இட்லி, வடை, பொங்கலை கொண்டு வாங்க. முடியும் வரை சாப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment