இது நகைச்சுவை திகில் படங்களின் காலம். இந்த ரகப் படங்களுக்குதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.
அதை உணர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டார்லிங்' சிரிக்க மட்டுமல்ல ரசிக்க, பயமுறுத்த வரும் படமாக உருவாகி வருகிறது.
சுமார் 50 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் முதலில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய படம் ‘பென்சில்' என்றாலும் ‘டார்லிங்' முந்திக் கொண்டு வெளிவரவிருக்கிறது.
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்' படத்தின் ரீமேக்தான் இந்த ‘டார்லிங்'. அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. சாம் ஆண்டன் இயக்குகிறார்.
ஜி வி பிரகாஷ்
‘டார்லிங்' பற்றி கதாநாயகனும் பாடகி சைந்தவியின் டார்லிங்குமான ஜி.வி.பிரகாஷ் பேசும் போது , "நான் யதேச்சையாக ஸ்டுடியோ க்ரீன' ஞானவேல்ராஜா சாரைச் சந்தித்தேன். ‘பென்சில்' படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எடுத்த சில காட்சிகளை பார்த்தார். அவருக்குப் பிடித்திருந்தது. அன்றே இந்த படம் பற்றிக் கூறினார். ‘பிரேம கதா சித்ரம்' ஒரு ஹாரர் படம். தெலுங்கில் மட்டுமல்ல கன்னடத்திலும் பெரிய வெற்றி பெற்ற படம். இதை தமிழில் எடுப்பது பற்றிப் பேசினார். நடிப்பது என்று முடிவு செய்தேன். இதன் தயாரிப்பில் கீதா ஆர்ட்ஸ், ஸ்டுடியோ கீரீன் என்று இரண்டு பெரிய நிறுவனங்கள் இணைந்தது கூடுதல் மகிழ்ச்சி.
அந்த ஒரிஜினல் படம் ‘பிரேம கதா சித்ரம்'தை விட காட்சி அமைப்பிலும் ஒலி அமைப்பிலும் சிறப்பாக பிரமாதமாக அமையும்படி நிறைய உழைத்திருக்கிறோம். ஒரு வெற்றிப் படத்தை மறுபடி எடுக்கும்போது அதைவிட மேம்பட்ட தரத்தில் எல்லா வகையிலும் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். நான் நடித்த முதல் படம் ‘பென்சில' என்றாலும் வெளிவரும் முதல் படமாக ‘டார்லிங்' படம் இருக்கும்," என்றார்.
சான் ஆன்டன்
படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன் கூறுகையில், "இது எனக்கு முதல்படம். நண்பர் லெட்சுமணன் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்'த்தின் எடுத்துக் கொண்டு தமிழுக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். வித்தியாசப்படுத்தி எடுத்திருக்கிறோம்.
ஹாரர், காமெடி, லவ், வித்தியாசம் என்று தரமான கமர்ஷிpயல் கதையாக படம் உருவாகியுள்ளது. ஹாரரும், ஹியூமரும் புதுவித சேர்க்கையாக படத்தில் பேசப்படும். படம் நன்றாக வர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர் கொடுத்த சுதந்திரம்தான் காரணம். கேட்டதெல்லாம் கொடுத்தார். அதனால்தான் நினைத்தபடி எடுக்க முடிந்தது.
சுமார் ஐம்பது படங்களுக்கு இசையமைத்தவர் என்றாலும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ஒத்துழைப்பு பெரியது. மீண்டும் மீண்டும் நடிக்கச் சொன்னாலும் அலுத்துக் கொள்ளாமல் நடித்தவர். படக்குழுவையே கஷ்டப்பட வைத்தேன். கதாநாயகன் உள்பட பலரையும் பல நாட்கள் தூங்கவிடவில்லை.
நாயகி நிக்கி கலராணி நடித்திருக்கிறார். கருணாஸ் தன்னை புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளார். பால சரவணனும் அப்படித்தான். ‘நான் கடவுள்' ராஜேந்திரன் ஏற்றுள்ள வேடமும் பேசப்படும். கிருஷ்;ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். 35 நாட்களில் திட்டமிட்டு 33 நாட்களில் முடித்ததற்கு அவரது அசுர உழைப்புதான் காரணம். தயாரிப்பாளர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவும் பெரிய விஷயம். என்ன கேட்டாலும் செய்து கொடுத்தார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இரண்டு, மூன்று நாட்கள் தூங்காமல் நடித்துக் கொடுத்தார். அதுமட்டுமல்ல அருமையான பாடல்களையும் போட்டுக் கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக ‘அன்பே அன்பே', 'உன் விழிகள் பாடல்கள்..' என் பேவரைட் என்பேன். பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்," என்றார்.
‘டார்லிங்' டிசம்பர் மாத்தில் வெளியாகிறது.
Post a Comment