சென்சாராகி வெளிவராத 464 தமிழ்ப் படங்கள்!

|

தமிழ் சினிமாவில் சென்சாராகி சான்று பெறும் எல்லாப் படங்களும் வெளியாவதில்லை.

வெளியான படங்களைவிட பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை, அப்படி வெளியாகாமல் உள்ள படங்களின் எண்ணிக்கை மட்டும் 464.

சென்சாராகி வெளிவராத 464 தமிழ்ப் படங்கள்!

குறிப்பாக 2014-ம் ஆண்டு மட்டும் 215 படங்கள் வெளியாகின. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இது மிகப் பெரிய எண்ணிக்கை. அதே நேரம் இந்த ஆண்டு மட்டும் தணிக்கை சான்றிதழ் பெற்று ரிலீசாகாமல் போன படங்கள் 144 ஆகும்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் சென்சாராகி இன்னும் வராமல் உள்ள படங்கள் 320.

ஆக 464 படங்கள் பெட்டியில் தூங்கிக் கொண்டுள்ளன. இவற்றை வெளியிட முடியாமல் அவற்றின் தயாரிப்பாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டது இன்னொரு சோகக் கதை.

இந்தப் படங்கள் வெளியாகாமல் கிடப்பதற்கு முக்கிய காரணம், நிதிச் சிக்கல்கள்தான். காப்பி, கதைப் பிரச்சினை, வழக்குகள் போன்றவை இன்னும் சில காரணங்கள்.

புதிதாக பதவி ஏற்கப் போகும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்துவார்களா?

 

Post a Comment