இலங்கையில் 60 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நிற்கும் அஜீத்

|

கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த அஜீத் ரசிகர்கள் என்னை அறிந்தால் படத்துக்காக 'தல'க்கு 60 அடி உயர கட்அவுட் வைத்துள்ளார்களாம்.

கௌதம் மேனனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் தல பொங்கல் என்று ரசிகர்கள் குஷியாக இருந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எம்.ஜி.ஆருக்கு 40, அஜீத்துக்கு 60 அடி கட்அவுட்

ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த அஜீத் ரசிகர்கள் அங்கு என்னை அறிந்தால் படத்திற்காக 'தல'க்கு 60 அடி உயர கட் அவுட் வைத்துள்ளார்களாம்.

இலங்கையில் எம்.ஜி.ஆருக்கு 40 அடி கட்அவுட் வைக்கப்பட்டது தான் சாதனையாக இருந்து வந்தது. ஆனால் ஆரம்பம் பட ரிலீஸையொட்டி அஜீத் ரசிகர்கள் அவருக்கு 58 அடி உயர கட் அவுட் வைத்து எம்.ஜி.ஆர். கட்அவுட் சாதனையை முறியடித்தனர்.

தற்போது ஆரம்பம் கட்அவுட் சாதனையை என்னை அறிந்தால் பட கட்அவுட் முறியடித்துள்ளது.

 

Post a Comment