இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று 48வது பிறந்த நாள்

|

இசைப்புயல் என வர்ணிக்கப்படும் ஏ ஆர் ரஹ்மான் இன்று 48வது பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான்.

திரையுலகுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 22 ஆண்டுகளும் இசையுலகில் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறார் ரஹ்மான்.

இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று 48வது பிறந்த நாள்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்தி, ஆங்கிலம் என சர்வதேச அளவில் ரஹ்மான் இசை பிரபலமானது. ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

இந்த ஆண்டு அவர் இசையில் கோச்சடையான், லிங்கா மற்றும் காவியத் தலைவன் போன்ற படங்கள் வெளியாகின. இவற்றில் கோச்சடையான் படத்தின் இசைக்காகவும் வேறு இரு ஆங்கிலப் படங்களின் இசைக்காகவும் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ஏ ஆர் ரஹ்மான் பெயர் இடம்பெற்றுள்ளது.

மூன்று படங்களின் இசைக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அவர் இன்னொரு ஆஸ்கர் பெற வாழ்த்துவோம்!

 

Post a Comment