அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

|

கவுண்ட மணி, வடிவேலுவின் ஒன்லைன் காமெடி வசனங்கள்தான் இப்போது உருவாகி வரும் பல புதிய படங்களுக்கு தலைப்பு.

கவுண்டரின் புகழ்பெற்ற அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா வசனம் இப்போது ஒரு புதுப் படத்தின் தலைப்பாகிவிட்டது.

கடுமையான முயற்சிக்குப் பிறகு சினிமாவில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கும் கணேஷ் பிரசாத் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

ஏற்கெனவே கரையோரம், தற்காப்பு போன்ற படங்களில் நடித்து வந்த அவர், இப்போது ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' படத்தில் நடிக்கிறார்.

தனது சினிமா ஆசை, இதுவரையிலான அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில், "
"கோயம்புத்தூர்ல என்ஜினியரிங் முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பனியில் பணியாற்றி வந்தேன். எனக்கு அங்கு வேலை செய்வது நெருடலாய் இருந்தது. சின்ன வயசுல இருந்து நான் அஜித் சார் ரசிகன், எனக்கு அவர மாதிரி நடிகன் ஆகனும்தான் ஆசை. சென்னைக்கு கிளம்பிட்டேன். இங்க பல இடங்களுக்கு வாய்ப்புகள் தேடி சென்றேன். பின்னர் ஸ்டுடியோ 9 நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து கொண்டே வாய்ப்புகளை தேடினேன்.

"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக நடிச்சிருக்கேன். இந்த படம் ஒரு காமெடி கலாட்டா பவர்ஸ்டார், சாம் ஆன்டர்சன் , ஜான் விஜய், சுப்பு, மனோ பாலா அண்ணன் இப்படி ஒரு பெரிய சிரிப்பு பட்டாளம். முதற்கட்ட படபிடிப்பு கொடைக்கானலில் முடிவடைந்துள்ளது, பாண்டிச்சேரி, சென்னை என படபிடிப்பை தொடர உள்ளோம்," என்றார்.

‘கரையோரம்' படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக வருகிறார் கணேஷ். இதில் இனியா அவருக்கு ஜோடி. ஷக்தி நாயகனாக நடிக்கும் 'தற்காப்பு' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

 

Post a Comment