சன்னி லியோனின் ஒன் நைட் ஸ்டேன்ட்

சன்னி லியோன் கலக்கும் ஒன் நைட் ஸ்டேன்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புதுமுகம் தனுஜ் விர்வானி.

சன்னி லியோன் தற்போது, ''ஏக் பெகலி லீலா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். உளவுத்துறை பெண்ணாக சன்னி லியோன் நடிக்கும் இப்படத்தை பாபிகான் இயக்குகிறார்.

இப்படத்தில், 'டோலி தாரோ டோல் பாஜே...'' என்ற பாடலுக்காக கடும் வெயிலில் நடனமாடியுள்ளார் சன்னிலியோன்.

சன்னி லியோனின் ஒன் நைட் ஸ்டேன்ட்

இந்தப்பாடல் ஏற்கனவே சல்மான்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான, ''ஹம் தில் தே சுகி சனம்'' என்ற படத்தில் இடம்பெற்றுள்ள 'டோல் பாஜே...' பாடல் தான். இதைத்தான் இப்போது ரீ-மேக் செய்துள்ளனர்.

சமீபத்தில் படமாக்கப்பட்ட இப்பாடலில் சன்னி லியோன் உடன் சுமார் 500 நடன கலைஞர்களும் சேர்ந்து ஆடியுள்ளனர். ராஜஸ்தான் நடன பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்பாடலில் கொளுத்தும் வெளியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கும் ஒன் நைட் ஸ்டேன்ட் படம் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நாயகனாக ராணா டக்குபதி நடிக்க இருந்தது, ஆனால் தற்போது அவருக்கு பதிலாக தனுஜ் விர்வானி நடிக்கிறார். இந்த தனுஜ் விர்வானி பழைய பாரதிராஜா நாயகி ரதியின் மகனாவார்.

ஜேஸ்மின் டி சைவுசா இயக்கி வரும் இப்படத்தில் மதுரிமா கிளாமர் நாயகியாக நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். கவர்ச்சி ஏரிகள் மோதப்போகும் இந்தப் படத்தில் கவர்ச்சி சுனாமியே வீசலாம் என்கிறார் இயக்குநர்.

 

காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான காக்கி சட்டை திரைப்படம் இப்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் திருட்டு சிடிக்களும் பெரும்பாலான இடங்களில் தாராளமாகக் கிடைக்கிறது.

தயாரிப்பாளர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்கிறது திருட்டு சிடி விற்பனை மற்றும் இணையதங்களில் அந்தப் படங்களின் வீடியோ வெளியாவது. பல பெரிய படங்களின் வீழ்ச்சிக்கும் இந்த திருட்டு வீடியோதான் காரணம்.

காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ

இதற்கு ஒருவகையில் தயாரிப்பாளர்களே காரணமாகவும் உள்ளனர். படத்தின் வெளிநாட்டு உரிமைகளை விற்பதால், அதிலிருந்துதான் திருட்டு வீடியோ வெளியாவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் போட்ட முதலை உடனே எடுக்கும் வழி சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமை விற்பனைதான் என்பது தயாரிப்பாளர் தரப்பு வாதம்.

இந்த திருட்டு வீடியோவைத் தடுக்க வழிதெரியாமல் தயாரிப்பாளர்கள் திண்டாடிக் கொண்டுள்ளனர்.

இந்த சூழலில் நேற்று வெளியான காக்கிச் சட்டை படத்தின் திருட்டு வீடியோ, நேற்று காலையே பல இணையதளங்களில் காணக் கிடைத்துள்ளது. அதுவும் தெளிவான 5.1 ஒலித் தரத்துடன் கூடிய வீடியோவாக.

திருட்டு சிடி விற்பவர்களும் ஜோராக தெருவுக்குத் தெரு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை அறிந்தால் படத்தின் திருட்டு சிடி, படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகிவிட்டது நினைவிருக்கலாம்.

 

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் காமெடி செய்கிறார் வடிவேலு.

விஜய்யும் வடிவேலுவும் இணைந்த வசீகரா, பகவதி, போக்கிரி, சச்சின், சுறா, காவலன் உள்ளிட்ட படங்களின் காமெடி பெரும் வரவேற்பைப் பெற்றது.

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு!

வடிவேலு தற்போது கதாநாயகனாக நடிப்பதால் மற்ற ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடிப்பதில்லை.

தற்போது எலி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. விஜய் புலி படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் விஜய் பிறந்த நாளில் வெளியாகப் போகிறது.

புலி படம் முடிந்ததும் விஜய் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் பிரதான காமெடி வேடத்தில் நடிக்கப் போகிறவர் வடிவேலுதானாம்.

அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து விட்டதாக தகவல் வெளியானது.

 

ருத்ரமா தேவி... யார் இந்த ராணி? இதோ ஒரு அறிமுகம்!

தெலுங்கில் அனுஷ்கா நடிக்க, குணசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ரமா தேவி படத்தின் கதை, ஒரு நிஜ வீராங்கனை, அரசியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டது.

யார் இந்த ருத்ரமா தேவி? அவர் செய்த சாதனை என்ன?

வடக்கில் ரஸியா சுல்தான் என்ற ஒரு ராணி இருந்தது நினைவிருக்கலாம். அவருக்குப் பிறகு இந்தியாவில் குறிப்பிடத்தக்க பெண்ணரசியாகத் திகழ்ந்தவர்தான் ருத்ரமா தேவி.


ருத்ரமா தேவி... யார் இந்த ராணி? இதோ ஒரு அறிமுகம்!

13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய, சோழர்கள் காலத்தில், 30 ஆண்டுகள் தென்னகத்தை ஆண்டவர் ராணி ருத்ரமா தேவி.

காகதீய வம்சத்தைச் சேர்ந்த இவர் 14 வயதில் அரியணை ஏறினார். 1259 முதல் 1289 வரை தற்போதைய தெலங்கானா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளை ஆண்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான் ஏராளமான குளங்கள் அந்தப் பகுதிகளில் வெட்டப்பட்டு, நீரைத் தேக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. தன் நாட்டு மக்களுக்கு பல நலத் திட்டங்களையும் அமல்படுத்தியுள்ளார். குறிப்பாக விவசாயிகள் மீது வரிச்சுமை இல்லாமல் பார்த்துக் கொண்டாராம்.

அந்நாட்களில் பல மன்னர்கள் படையெடுத்து தொல்லை தந்தபோதும், தனது போர் திறத்தாலும் திறமையான படையின் உதவியுடனும் 30 ஆண்டுகாலம் ஆட்சியைத் தக்க வைத்துள்ளார் இந்த ராணி. ருத்ரமா தேவி

ருத்ரமா தேவி... யார் இந்த ராணி? இதோ ஒரு அறிமுகம்!

ருத்ரமா தேவியின் ஆட்சி, அவர் இறப்பு குறித்த ஒரு கல்வெட்டு சந்துபட்ல கிராமத்தில் கண்டெடுக்கப்படும் வரை, அவர் குறித்த ஆதாரப்பூர்வ தகவல் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

ருத்ரமா தேவி இறந்த நாள் நவம்பர் 27, 1289 என்று அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று ஆதாரங்களை முழுமையாக வைத்தே இந்தப் படத்தை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர் குணசேகர்.

 

காக்கி சட்டை விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிப்பு: சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, இமான் அண்ணாச்சி, பிரபு, மனோபாலா, விஜய் ராஸா

ஒளிப்பதிவு: சுகுமார்

இசை: அனிருத்

தயாரிப்பு: தனுஷ்

இயக்கம்: துரை செந்தில்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வேண்டுமென்றால், அதற்கு முதல் வழி ஆக்ஷன் கதைகளில் நடிக்க வேண்டும். இதுவரை காமெடி, காதல் கதைகளில் பாதுகாப்பாக நடித்து வந்த சிவகார்த்திகேயன், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் நாயகனாக காக்கிச் சட்டை மாட்டியுள்ளார்.

ஒரு டிபிகல் போலீஸ் ஹீரோவாக, அதிரடி இன்ஸ்பெக்டராக சிவாவின் அறிமுகம். 'பார்றா பில்டப்பை' என்று ஆடியன்ஸ் கூறி வாய் மூடுமுன்பே, அது டம்மி கான்ஸ்டபிளான சிவகார்த்திகேயனின் பகல் கனவு என முடிய, பக்கா சிவகார்த்திகேயன் டைப் காமெடியுடன் தொடங்குகிறது படம்.

காக்கி சட்டை விமர்சனம்  

என்னை அறிந்தால் படத்தில் அஜீத் லேசாகத் தொட்ட உடல் உறுப்பு திருட்டை, இந்தப் படத்தில் முழுசாகவே கையிலெடுத்திருக்கிறார்கள். அதுவும் கொஞ்சம் விஷய ஞானத்துடன்.

வடக்கிலிருந்து தமிழகம் வரும் கூலித் தொழிலாளர்களை குறிவைக்கிறது ஒரு கும்பல். அவர்களைக் கடத்தி, கார்பன் மோனாக்ஸைடு கொடுத்து மூளைச் சாவடைய வைத்து, அவர்களின் உடல் உறுப்புகளை வெளி நாடுகளுக்கு விற்பதையே தொழிலாகக் கொண்ட வில்லனையும் அவன் கூட்டத்தையும், ஒரு கடைநிலை போலீ்ஸ் கான்ஸ்டபிள் எப்படி தண்டிக்கிறான் என்பது கதை.

இமான் அண்ணாச்சியுடன் காமெடி, ஸ்ரீதிவ்யாவுடன் காதலில் மட்டுமல்ல, காக்கியிலும் தன்னால் கலக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த சீருடை அத்தனைப் பொருத்தமாக இருக்கிறது அவருக்கு. ஆனால் ஆக்ரோஷமான காட்சிகளில் அவ்வப்போது அவரது காமெடி முகம் எட்டிப் பார்க்கிறது. முதல் ஆக்ஷன் படம் என்பதால் இருக்கலாம்.

காக்கி சட்டை விமர்சனம்

நடனத்தில் ரொம்பவே சமாளித்திருக்கிறார். அடிக்கடி ஊதாக்கலரு.. ஸ்டெப்பும், மான் கராத்தோ போஸும் எட்டிப் பார்க்கின்றன. பிச்சைக்கார வேடத்தில் குற்றவாளியை வேவு பார்க்கும் காட்சியில் உடனிருக்கும் உண்மைப் பிச்சைக்காரனுக்கும் இவருக்கும் நடக்கும் உரையாடல் கலகல.

அதுபோல சூழலுக்கேற்ப, பிரபு, இமானின் குரலில் பேசுவதும், ரஜினி, அஜீத், விஜய் வசனங்களை துணைக்கழைத்துக் கொள்ளும் புத்திசாலித்தனமும்!

ஸ்ரீதிவ்யாவை அந்த நர்ஸ் கெட்டப்பில் பார்க்கும்போது, ஏதோ பள்ளிக்கூட சீருடையில் வரும் மாணவி மாதிரிதான் இருக்கிறார். முந்தைய இரு படங்களை விட இதில் கூடுதல் ஜொலிப்பு. குறிப்பாக பாடல் காட்சிகளில். லிப்ஸ்டிக்கை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இமான் அண்ணாச்சிதான் படத்தின் பிரதான நகைச்சுவை நடிகர். கதையோடு இழைந்து வரும் அவர் காமெடி ரசிக்க வைக்கிறது. மனோபாலாவும் கிச்சுகிச்சு மூட்டுகிறார். குறிப்பாக அந்த சாமியார் காட்சி வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.

பிரபுவுக்கு இந்த மாதிரி வேடங்கள் சர்வ சாதாரணம். ஆனால் ஏற்கெனவே அயனில் பார்த்த முடிவுதான் அவருக்கு இதிலும்.

காக்கி சட்டை விமர்சனம்

அலட்டிக்கொள்ளாமல் வில்லத்தனம் காட்டியிருக்கிறார் விஜய் ராஸ்.

படத்தின் முன்பகுதி, நிறைய கலகலப்பும், கொஞ்சம் சீரியஸுமாகப் போகிறது. பின்பகுதியை நிறைய எதிர்ப்பார்க்கவும் வைக்கிறது. ஆனால்...

ரொம்ப நேரம் ஏதோ இரும்புப் பட்டறைக்குள் உட்கார்ந்திருந்த மாதிரி ஒரு அலுப்பு, வறட்சி, நம்பவே முடியாத காட்சிகள்.

அத்தனை பாதுகாப்பு மிக்க சர்வர் ரூமில், சாதாரண நர்ஸ் ஸ்ரீதிவ்யா நுழைத்து ஆவணங்களைக் காப்பி செய்து வருவது, அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்து வைத்திருக்கும் வில்லனின் லேப்டாப்பிலிருந்து ஆதாரங்களை உருவுவது, அந்தப் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியால் சுடுவது... என நிறைய நம்ப முடியாத காட்சிகள். அத்தனை உஷாரான வில்லன், ஸ்ரீதிவ்யா, சிவகார்த்தி விஷயத்தில் அத்தனை அலட்சியமாகவா இருப்பான்?

பின் பகுதி காட்சிகளில் இந்தக் கதை எப்படி முடியப் போகிறது என்பதை எளிதாக யூகிக்க முடிவது இன்னொரு மைனஸ்.

தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், ஒளிப்பதிவாளர் சுகுமாருக்குதான் முதலிடம். அழகான நார்வேயை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார் அந்த காதல் பாடலில். அனிருத்தின் பின்னணி இசை காதுகளைப் பதம் பார்க்கிறது. இரண்டு பாடல்கள் பரவாயில்லை. தொடர்ந்து ஒரே மாதிரி பாடிக் கொண்டிருக்கிறார்(கள்) அனிருத்தும் அவரது பின்னணிப் பாடகர்களும். இசையமைக்க ஆரம்பித்து ஆறேழு படங்கள் முன்னணிக்கு வந்துவிட்ட அனிருத் இசை, பாடல்கள், அதே வேகத்தில் அலுப்பூட்ட ஆரம்பித்திருப்பதை அவர் கவனிக்க வேண்டும்!

காக்கி சட்டை விமர்சனம்

இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு எடுத்துக் கொண்ட கதை, அதன் கரு பற்றிய அறிவு நிரம்பவே இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே பல படங்களில், இந்த உறுப்புகள் திருட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. அதனால் வேறு ஏதாவது வித்தியாசமான கதையை எடுத்து, இத்தனை மெனக்கெட்டிருந்தால், பெரிய வெற்றி கிடைத்திருக்கும்.

இந்தப் படம் ஓஹோ அல்ல, ஒரு முறை பார்க்கலாம் ரகம்தான்!

 

முகத்தில் குத்தும்போது டைமிங் மிஸ்... படப்பிடிப்பில் நீத்து சந்திரா காயம்!

பிரபல நடிகை நீத்து சந்திராவுக்கு வைகை எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பில் முகத்தில் காயம் ஏற்பட்டது.

தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நடித்தவர் நீது சந்திரா. அமீரின் ஆதி பகவான் படத்துக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்கவில்லை.

முகத்தில் குத்தும்போது டைமிங் மிஸ்... படப்பிடிப்பில் நீத்து சந்திரா காயம்!  

ஒரு இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழில் ‘வைகை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடிக்கிறார். இதில் ஆர்.கே நாயகனாக நடிக்கிறார்.

சென்னை வளசரவாக்கத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நீது சந்திராவுக்கும் நடிகர் பவனுக்கும் இடையே நடக்கும் கைகலப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது, பவனின் டைமிங் மிஸ்ஸானதில் நீதுவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

உடனே அவருக்கு சக நடிகைகள் உதவினர். சிறிது நேரம் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நீத்து. படப்பிடிப்பில் இதெல்லாம் சகஜம்தான். இதற்காக கோபம் கொள்ளவில்லை என்றார் அவர்.

 

சொந்தக் கதையைப் படமாக்குவதால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்

தன் சொந்தக் கதையைப் படமாக்கி வரும் பிரபல நடிகை ஷகிலாவுக்கு யாரோ சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்களாம்.

கவர்ச்சி நடிகை ஷகிலா தெலுங்கில் ‘ரொமான்டிக் டார்கட்' என்ற படத்தை இயக்கி வருகிறார். தன் வாழ்க்கையில் நடந்த பாலியல் கொடுமைகள் உள்பட, இருட்டு உலகுக்குள் நடக்கும் பல அவலங்களை இந்தப் படத்தில் சொல்லப் போகிறாராம் அவர்.

சொந்தக் கதையைப் படமாக்குவதால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்

இதில் அரசியல்வாதிகள், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியும் காட்சிகள் உள்ளனவாம்.

இதனால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. படத்தை வெளியிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று சிலர் போனில் எச்சரிக்கிறார்களாம்.

ஹைதராபாதில் நேற்று நடந்த இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஷகிலா இவற்றைத் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, ‘‘மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். தடைகளை மீறி படத்தை வெளியிடப் போகிறேன்'' என்றார்.

இந்த படத்தில் நரேஷ் நாயகனாகவும், ஸ்வேதா சைனி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

 

'அஞ்சல'... விமல் - நந்திதா நடிக்கும் டீ கடை படம்!

டீ கடையை மையப்படுத்தி ஒரு படம் உருவாக்கப்படுகிறது. அதற்கு அஞ்சல என்று தலைப்பிட்டுள்ளனர்.

இயக்குனர்கள் ரத்ன குமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் படமாக்கபட்டுள்ளது.

விமல் - நந்திதா

யமஹா ஷோரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக விமல், கல்லூரி மாணவியாக நந்திதா நடிக்கிறார்கள்.

'அஞ்சல'... விமல் - நந்திதா நடிக்கும் டீ கடை படம்!

டீ கடையும்

பசுபதி ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் இமான் அண்ணாச்சி, ஆடுகளம்' முருகதாஸ், சுப்பு பஞ்சு இவர்களுடன் ‘டீ' கடை மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. அனைவரயும் கவரும் ஒரு நகைச்சுவை கலந்த காதல் பொழுது போக்கு பாடமாக வருகிறது ‘ அஞ்சல'.

திலீப் சுப்பராயன்

தனது ஃபார்மர்'ஸ் மாஸ்டர் ப்ளான் புரோடக்ஷன் சார்பில் திலிப் சுப்பராயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

"ஒரு நாள் தற்செயலாக ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனிடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே இப்படத்தை தானே தயாரிக்க முன் வந்தார்," என்கிறார் இயக்குநர்.

திலிப் சுப்புராயன் பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சுப்பராயன்

இந்தப் படத்துக்கு சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியினை மேற்கொள்ள, ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். வெற்றி படங்களான உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேஸ் திரைப்படங்களுக்கு இசையமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நம்ம கதை

"நம் வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கவிருக்கும் அன்றாட நிகழ்வுகளின் கோர்வையே அஞ்சல'. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்கிறார் தங்கம் சரவணன்.

 

ஹாலிவுட் நடிகை லுபிதாவின் முத்து பதித்த ரூ.93 லட்சம் கவுன் மாயம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு நடிகை லுபிதா நியாங்கோ அணிந்து வந்த முத்துக்கள் பதித்த ரூ.93 லட்சம் மதிப்புள்ள கவுனை யாரோ திருடிவிட்டனர்.

ஹாலிவுட் நடிகை லுபிதா நியாங்கோ அண்மையில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு அவர் பிரான்சிஸ்கோ காஸ்டா டிசைனர் கவுன் அணிந்து வந்தார். அந்த கவுனில் 6 ஆயிரம் முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. விழா முடிந்த பிறகு லுபிதா அந்த கவுனை மேற்கு ஹாலிவுட்டில் உள்ள லண்டன் ஹோட்டலில் தான் தங்கியிருந்த அறையில் வைத்திருந்தார்.

ஹாலிவுட் நடிகையின் 6,000 முத்து பதித்த ரூ.93 லட்சம் கவுன் அபேஸ்!

லுபிதா வெளியே சென்ற நேரத்தில் அந்த கவுனை யாரோ திருடிவிட்டனர். அந்த கவுனின் விலை ரூ.93 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லுபிதா தங்கிய ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானவை ஆய்வு செய்யப்பட்டது. கவுன் கடந்த புதன்கிழமை மாலை மாயமாகியுள்ளது.

கென்யாவைச் சேர்ந்த லுபிதா 12 ஸ்லேவ்ஸ் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிக்கைக்கான ஆஸ்கர் விருதை கடந்த ஆண்டு பெற்றார்.

 

ராம் சரண்- காஜல் அகர்வால் நடிக்கும் ராம்லீலா

மகதீரா ஜோடியான ராம்சரண் - காஜல் அகர்வால் தெலுங்கில் நடித்த கோவிந்துடு அந்தரிவாடலே படம் ராம் சரண்- காஜல் அகர்வால் நடிக்கும் ராம்லீலா  

இந்தப் படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு சமீர்ரெட்டி, இசை யுவன் சங்கர் ராஜா.

கிருஷ்ண வம்சி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு தமிழில் வசனம் எழுதியுள்ள ஷாஜி, படம் குறித்துக் கூறுகையில், "அப்பா பிரகாஷ்ராஜுக்கும் மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான்.

இந்த குடும்பக் கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா படமாக கிருஷ்ணவம்சி உருவாக்கியுள்ளார். விரைவில் இப்படம் தமிழில் திரைக்கு வருகிறது," என்றார்.

தெலுங்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு அதிகம் வசூலித்த தெலுங்குப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாளை நடிகர் சங்க செயற்குழு- திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை

சென்னை: நடிகர் சங்க செயற்குழு நாளை சரத்குமார் தலைமையில் கூடுகிறது. இதில் திருட்டு வி.சி.டி.யை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நாளை நடிகர் சங்க செயற்குழு- திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை

சிம்பு, சத்யபிரியா, நளினி, சார்லி, சின்னஜெயந்த், ஸ்ரீகாந்த், குண்டு கல்யாணம், குயிலி, மனோ பாலா, சகுந்தலா, கே.ஆர்.செல்வராஜ், எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

திரைப்படத் துறைக்கு பெரும் சவாலாக உள்ள திருட்டு வி.சி.டி, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நடிகர் நடிகைகளின் அந்தரங்க ஆபாச வீடியோக்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

 

ஏப்ரல் 10-ம் தேதி மிரட்ட வருகிறாள் காஞ்சனா பேய்!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் காஞ்சனா 2 படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராகவும், பின்னர் இயக்குநராகவும் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ்.

தமிழில் அவர் இயக்கிய முதல் படம் முனி. அடுத்தடுத்து தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய லாரன்ஸ், மீண்டும் முனி படத்தின் இரண்டாம் பகுதியாக காஞ்சனாவை இயக்கினார். படம் தாறுமாறான வெற்றியைப் பெற்றது.

ஏப்ரல் 10-ம் தேதி மிரட்ட வருகிறாள் காஞ்சனா பேய்!

இப்போது காஞ்சனாவின் இரண்டாம் பகுதியை உருவாக்கியுள்ளார்.

டாப்சி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

நகைச்சுவை, திகில், ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியுள்ள காஞ்சனா 2 வரும் ஏப்ரல் 10-ம் தேதி, சித்திரைப் புத்தாண்டுக்கு ஒரு வாரம் முன்பே உலகெங்கும் வெளியாகிறது. தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

 

மலையாள ஹிட்டான வெள்ளிமூங்காவை ரீமேக்கும் சுந்தர் சி

மலையாளத்தில் பெரும் வெற்றிப் படமாக ஓடிய வெள்ளிமூங்காவை தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

தமிழில் கமர்ஷியல் இயக்குநர்களில் முன்னணியில் இருப்பவர் சுந்தர் சி. இவரது படங்கள் தயாரிப்பாளர்களையும் சரி, ரசிகர்களையும் சரி பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை.

மலையாள ஹிட்டான வெள்ளிமூங்காவை ரீமேக்கும் சுந்தர் சி

சமீபத்தில் வந்த அரண்மனை படம் பெரும் வசூலைக் குவித்தது. ஆம்பள படமும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மலையாள ஹிட்டான வெள்ளிமூங்காவை ரீமேக்கும் சுந்தர் சி

அடுத்து இவர் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது தனது திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளார் சுந்தர்.

மலையாள ஹிட்டான வெள்ளிமூங்காவை ரீமேக்கும் சுந்தர் சி

மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற வெள்ளிமூங்கா படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார். ஒரு நாற்பது வயது முரட்டு அரசியல்வாதி, இளம் பெண்ணின் மீது காதல் கொள்ள, அதன் விளைவுகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம் இந்த வெள்ளிமூங்கா. சுந்தர் சியே நாயகனாகவும் நடிக்கிறார்.

இந்தப் படத்தை சுந்தர் சி தன் பாணியில் இயக்கினால் எப்படி இருக்கும்?

ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து நிச்சயம்!

 

இன்று சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை.. அதிக அரங்குகளில் வெளியீடு

உலகெங்கும் இன்று 800 அரங்குகளில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை வெளியானது.

எதிர்நீச்சல் படத்துக்குப் பிறகு, அதே காம்பினேஷனில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் காக்கிச் சட்டை.

இன்று சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை.. அதிக அரங்குகளில் வெளியீடு

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். பிரபு, மனோபாலா, இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் 800-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் இது முக்கிய கட்டமாகும். வளரும் நடிகர் என்ற நிலையிலிருந்து, முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு இந்தப் படம் அவரை உயர்த்தியுள்ளது.

 

ரஜினி - லதாவுக்கு இன்று 35வது திருமண நாள்!

பணக்காரன் படம் வெளியான பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26-ம் தேதி

"நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க நல்லா வாழணும்..."

-என்று ரஜினி - லதா தம்பதிகளை வாழ்த்துவது ரசிகர்களின் வழக்கமாகிவிட்டது.

ரஜினி - லதாவுக்கு இன்று 35வது திருமண நாள்!

திரையுலகம் என்றாலே ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து போகும் உறவுகள் என்பதுதான் பலர் மனதிலும் உள்ள பிம்பம்.

இந்தத் தலைமுறையில் அதைத் தகர்த்த கலைஞர், மனிதர், கணவர் ரஜினி.

உலகமே போற்றும் ஒரு மகத்தான கலைஞர், தனது குடும்ப வாழ்க்கையை தன்னைப் பின் தொடர்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். ரஜினியும் லதாவும் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

"மனைவி வந்த நேரம்தான் என் வாழ்க்கை சீரான பாதைக்குத் திரும்பியது... என் வாழ்க்கையின் எந்த முடிவையும் மனைவியைக் கேட்காமல் எடுத்ததில்லை. கணவன் - மனைவி என்றால் சின்னச் சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும்... அதையெல்லாம் ஜாலியாகக் கடந்து வர வேண்டும்," என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி.

தன் கணவர் ரஜினிக்காக எதையும் செய்யத் தயங்காதவர் லதா. அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது நிலைகுலைந்து விடாமல், ஒரு இரும்புப் பெண்மணியாக நின்று அவர் நலம் பெற துணை நின்றார். கணவர் நலம் பெற்று வந்தததும், கடவுளுக்கு தன் முடியை காணிக்கையாக்கினார். ரஜினி என்ற மாபெரும் ஆளுமை சோதனைகளில் சிக்கும்போதும், அவருக்கு கவசமாகத் திகழ்ந்தவர், திகழ்பவர் லதா.

35 ஆண்டுகள் இந்தத் தம்பதிகளின் படத்தைப் பார்க்கும்போதும் சரி, பெயர்களைச் சொல்லும்போதும் சரி.. தம் குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைத்து மகிழ்ந்து பரவசப்படுகிறார்கள் ஒவ்வொரு ரஜினி ரசிகரும்.

இந்த உதாரணத் தம்பதிகள் நீண்ட ஆயுளுடனும், குறைவில்லாத மகிழ்ச்சியுடனும் வாழ இயற்கையும் இறைவனும் துணையிருக்கட்டும்.

 

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

சென்னை: இன்று திருமண நாள் காணும் ரஜினிகாந்த், தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களைச் சந்தித்தார்.

ரஜினி - லதா தம்பதியினருக்கு இன்று 35 வது திருமண நாளாகும்.

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

வழக்கமாக ஆண்டின் விசேஷ நாட்களில் ரஜினி வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்துவதும் வாழ்த்துகள் பெறுவதும் ரசிகர்களின் வழக்கம்.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரஜினி பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் தவறாமல் ரஜினியின் வீட்டு முன் கணிசமான ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள்.

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

பெரும்பாலும் அவர்களை ஏமாற்றாமல், சந்தித்து வாழ்த்தி அனுப்புவார் ரஜினி. அவர் இல்லாத நேரங்களில் லதா ரஜினி ரசிகர்களைச் சந்திப்பார்.

இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அடுத்து இன்று திருமண நாளன்றும் சந்தித்தார்.

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

காலையிலேயே ரஜினி - லதா தம்பதியரைப் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்களை ரஜினியின் உதவியாளர் சத்தியநாராயணா ஒழுங்குபடுத்தினார். பின்னர் ரஜினி வெளியில் வந்து சிறு மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கும்பிட்டார்.

ரசிகர்கள் அவரைப் பார்த்து தலைவா.. வாழ்த்துகள் என்று முழங்கினர். அவரும் சிரித்தபடி நன்றி கூறி வாழ்த்துகளை ஏற்றார்.

 

ஆடியோ நிறுவனம் தொடங்கியது ஸ்டுடியோ கிரீன்.. முதல் ரிலீஸ் கொம்பன்!

தொடர்ந்து வெற்றிப் படங்களாகத் தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், இப்போது ஆடியோ நிறுவனம் தொடங்கி, சிடிக்களையும் வெளியிட ஆரம்பித்துள்ளது.

2006ம் ஆண்டும் சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த நிறுவனத்தின் முதல் படம் இது.

ஆடியோ நிறுவனம் தொடங்கியது ஸ்டுடியோ கிரீன்.. முதல் ரிலீஸ் கொம்பன்!  

சூர்யா, கார்த்தி நடித்து வரும் பெரும்பாலான படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிப்பது மட்டுமல்லாமல் படங்களை வாங்கி விநியோகமும் செய்து வருகிறது.

இப்போது இந்நிறுவனம் ஆடியோ நிறுவனத்தையும் தொடங்கவுள்ளது. கார்த்தி-லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பன் படம் மூலம் தனது ஆடியோ கம்பெனியான கிரீன் ஆடியோவை அறிமுகம் செய்யவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்' படத்தின் ஆடியோவையும் கிரீன் ஆடியோ நிறுவனமே வெளியிடுகிறது.

 

பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஏ வின்சென்ட் மரணம்

மூத்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ வின்சென்ட் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

தமிழில் யார் பையன், உத்தம புத்திரன், கல்யாணப் பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட்.

ஸ்ரீதர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார்.

பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஏ வின்சென்ட் மரணம்

அமரர் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண் போன்ற படங்களுக்கும், சிவாஜி கணேசன் நடித்த கவுரவம், வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏராளமான தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள வின்சென்ட், 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இரு வீடுகள், எங்களுக்கும் காலம் வரும், நாம் பிறந்த மண், திருமாங்கல்யம் போன்றவை இவர் இயக்கிய தமிழ்ப் படங்களில் சில. மலையாளத்தில் பல படங்கள் இயக்கியுள்ளார்.

1997-ம் ஆண்டு அன்னமய்யா தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு, ஓய்வை அறிவித்தார்.

2003-ம் ஆண்டு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இவருக்கு கவுரவ உறுப்பினர் பதவி அளித்தது. பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஜெயனன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட் இவரது மகன்களாகும்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் இன்று மரணமடைந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வின்சென்டின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

1.யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

2. என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஊர்,
வாசுதேவ நல்லூர்.
என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஜாதி,
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்.
நானும் நீயும் உறவின்முறை,
எனது ஒன்றுவிட்ட
அத்தை பெண் நீ.
எனவே
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!

இன்று இயக்குநர் கவுதம் வாசுதேவ ‘மேனனு'க்கு பிறந்தநாள் என்று முகநூலில் அவருக்கு குவிந்த வாழ்த்துக்கள் மூலம் தெரிந்துகொண்டேன். ஆயிரம் ரூபாய்க்கு பூச்செண்டு வாங்கி எனது வாழ்த்துக்களையும் கூரியர் மூலம் அனுப்பி இருக்கிறேன் கவுதம். பெற்றுக் கொள்ளுங்கள்.

சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

கமல், சிம்பு, சூர்யா, மாதவன், அஜீத் என்று பல முன்னணி நடிகர்களை வைத்து ஓரளவுக்கு சிறப்பான படங்களை இயக்கியவர் என்ற முறையில் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் ஆதர்சம் இந்த கவுதம் மேனன்.

‘மின்னலே' படத்தில் வெறும் கவுதமாக இருந்தவர் சில படங்களுக்குப் பின்னர் கவுதம் மேனன் ஆகி அப்புறம் கவுதம் வாசுதேவ் மேனன் என்று ஆக்கிக்கொண்டார்.

கவிதை 1 குறுந்தொகை இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம். கவிதை 2 மீரா எழுதியது. காலங்காலமாக நம் சமூகம் ஜாதி விஷயத்தில் மீராவின் கவிதையாகவே இருந்து விடப்போகிறது என்பதில் எவ்வித ஐயமும் எனக்கு இல்லை.

ஏனெனில் கடந்த வாரம் விஜய் டி.வி. ‘நீயா நானா' நிகழ்ச்சியில் கூட வேறு சாதிக்காரனுக்கு, அதுவும் கீழ்சாதிக்காரனுக்கு பொண்ணு தரவே மாட்டோம் என்று வெட்கமில்லாமல் முழங்க ஒரு கூட்டத்தால் முடிகிறது.
அவர்களில் பெரும்பாலும் படிப்பறிவில்லாத பாமரர்கள் என்று சொல்லி ஒதுக்கி விடலாம். அதே நிகழ்ச்சியில் இன்னும் காட்டுமிராண்டிகள் காலத்திலேயே இருக்கிறோம்' என்று சுப.வீ. பொறுமினாரே, அப்படிப் பொறுமிக்கொண்டே இருந்துவிட வேண்டியதுதான்.

ஆனால் கலைத்தாயின் பிள்ளைகள், சமூகத்துக்கு, அதன் விடிவுக்கு வழிகாட்ட வந்தவர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர்கள் மத்தியில் வரவர சாதி உணர்வு வெறிகொண்டு வளர்ந்து வருவதாகவே தோன்றுகிறது.

சமூகத்தின் அத்தனை விரோதிகளையும் தனது ஹீரோவின் துப்பாக்கி கொண்டு சுட்டுப் பொசுக்கும் கவுதம் வாசுதேவனால் தனது பெயரில் வால் போல் நீட்டிக்கொண்டிருக்கும் மேனனை நறுக்க முடியவில்லை. கோட்டுக்கு டை அணிவதுபோல் அவர் தனது ஜாதியை அணிந்துகொண்டு திரிகிறார்.

இந்த கவுதம் மேனன் ஒரு உதாரணம்தான். இன்று சினிமாவில் பாதிக்கும் மேற்பட்டோர் பெயரில் போட்டுக்கொண்டோ, அல்லது வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரங்களில் எல்லாம் வெளியே எடுத்து ஆட்டிவிட்டுக் கொண்டேதான் திரிகிறார்கள்.

சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

மும்மொழி கண்ட முன்னணி இயக்குநர் அவர். தொடர்ந்து கவனித்து வந்தால் ஒன்று புரியும். எப்போதெல்லாம் பிரச்சினைகள் பெரிதாகின்றதோ அப்போதெல்லாம் ‘எனக்குப் பின்னால் என் சாதிக்காரர்கள் இருக்கிறார்கள்'. என்று மிரட்டுவார். இப்படி சாதி பார்ப்பவர் என் சாதிக்காரர்கள் மட்டும் என் படம் பார்த்தால் போதும் என்று சொல்ல முன்வருவாரா?

தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் மூன்று பேர் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது உதவியாளர்களில் 90 சதவிகிதம் பேர் 'தற்செயலாக' அவர்களது ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ‘தற்செயலாக சொந்த ஜாதிக்காரர்கள்' அமைகிற ஜாதி பாலிடிக்ஸை, நான் மிகவும் நேசிக்கிற இயக்குநர்கள் அலுவலகத்தில் கூட பல வருடங்களாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தோளில் கைபோட்டு நட்புக்காட்டி அங்கு பூணூல் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்கிற ஆதிகால டெக்னிக் போல இது சினிமாவெங்கும் பெரும்பாலான இடங்களில் நிரம்பி வழிகிறது.

உத்தமர், மத்திமர் ஆகிய மற்ற இரு காமெடியன்கள் யாரென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். மூன்றாமவர் கருணாஸ் லொடுக்குப் பாண்டியாக அறிமுகமாகி கொண்டாடப்பட்டபோது அவரது ஜாதி, ஜனங்களுக்குத் தெரியாது. அவரைத் திரையில் பார்த்தாலே சிரித்தார்கள். அறிமுகமான சம்பந்தப்பட்ட ஆண்டிலேயே கமல், ரஜினி படங்கள் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடி கட்டிப்பறந்தார். சம்பாத்தியம் கோடிகளை எட்டியது. எப்போதும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மட்டுமே பயணம் செய்தார்.

ஆனால் இன்று 'வருங்கால முதல்வர்' கனவில் ஒரு ஜாதி சங்கத்தை துவக்கிக் கொண்டு தெருத் தெருவாய் போஸ்டர்கள் ஒட்டித் தள்ளுகிறார். இதனாலேயே சொந்த ஜாதிக்காரர்கள் உட்பட அனைவருமே இவரது நகைச்சுவைக்கு சிரிக்கத் தெரியாமல் முழிக்கிறார்கள். மார்க்கெட் முற்றிலும் சரிந்து, ‘எனக்கு படம் தயாரித்த வகையில் 9 கோடி ரூபாய் கடன் இருக்கிறது' என்று கண்ணீர் வடிக்கிறார்.

இந்தக் கொடூர காமெடிகளுக்கு மத்தியில் சமீப காலமாக ஜாதி நச்சு அதிகமாக வெளிப்பட ஆரம்பித்திருப்பது நடிகைகள் மத்தியில். நவ்யா நாயர்கள், லட்சுமி மேனன்கள், ஜனனி அய்யர்கள், லேகா ஷெட்டிகள், மீரா ரெட்டிகள் என்று ஜாதிப்பெயர் இல்லாமல் எந்த நடிகையும் இண்டஸ்ட்ரிக்குள் கால் எடுத்து வைப்பதில்லை.

சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

குப்புற, மல்லாக்க, பக்கவாட்டில் என்று எப்படிப் படுத்து யோசித்தாலும் பெயருக்குப் பின்னால் இருக்கும் இந்த ஜாதி வால்கள் எந்த இயக்குநரையோ, நடிகரையோ, நடிகையையோ வாழ வைத்ததாக எனக்கு நினைவுகள் இல்லை. ஆனாலும் எதற்காகவோ அந்த முட்டாள்தனத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.

நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் போல் எதிர்காலத்தில் அய்யர் நடிகைகள் சங்கம், ஷெட்டி நடிகைகள் சங்கம், மேனன் நடிகைகள் யூனியன் என்று துவங்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோணுகிறது!

 

நூறாவது நாள் படம்: மணிவண்ணன் மகன் மீது தயாரிப்பாளர் மகள் புகார்

நூறாவது நாள் படத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. ஆனால் எங்கள் அனுமதி பெறாமல் படத்தை ரீமேக் செய்ய முயல்கிறார் மணிவண்ணன் மகன் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி நடித்து, மணிவண்ணன் இயக்கிய படம், ‘நூறாவது நாள்.' எண்பதுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திகில் படம் அது.

இந்த படத்தை மீண்டும் எடுக்கப் போவதாகவும், அதில் ‘சதுரங்க வேட்டை' புகழ் நட்ராஜ் நடிக்கப் போவதாகவும் இயக்குநர் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் கூறியிருந்தார்.

நூறாவது நாள் படம்: மணிவண்ணன் மகன் மீது தயாரிப்பாளர் மகள் புகார்

ரகு மணிவண்ணன் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமைதிப்படை 2-ல் பிரதான வேடத்தில் நடித்தார். ‘நூறாவது நாள்' படத்தை ஹாலிவுட் பாணியில், ‘ரீபூட்' என்ற தொழில்நுட்பத்தில் தானே இயக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு ரகு மணிவண்ணன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ‘நூறாவது நாள்' படத்தை தயாரித்த எஸ்.என்.எஸ்.திருமாலின் மகள் ஜே.பத்மாவதி ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், "‘மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள், 24 மணி நேரம் ஆகிய 2 படங்களையும் என் தந்தை எஸ்.என்.எஸ்.திருமால் தயாரித்தார் அந்த படங்களின் உரிமைகள் என்னிடம் உள்ளன. இதனை இயக்குநர் மணிவண்ணனே எழுதிக் கொடுத்துள்ளார்.

இப்போது ‘நூறாவது நாள்' படத்தை மீண்டும் இயக்கப் போவதாக ரகு மணிவண்ணன் கூறியிருக்கிறார். இதற்காக, அவர் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. படத்தின் உரிமை தயாரிப்பாளரிடம் இருக்கும்போது, அனுமதி பெறாமல் அதை மீண்டும் தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும்.

இதுதொடர்பாக, ரகு மணிவண்ணனுடன் வேறு யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவர்களும் அந்த குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படுவார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முனி 3 அல்ல... காஞ்சனா 2!

லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படம் சுமாராகப் போனாலும், அதன் அடுத்த பகுதியான காஞ்சனா பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறுவர், பெரியவர் என அனைவருமே ரசித்து மகிழ்ந்த படம் அது.

இப்போது அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பாகத்தை இயக்குகிறார் லாரன்ஸ்.

இந்தப் படத்துக்கு முதலில் 'முனி 3 கங்கா' என்று பொதுவாக பெயர் சூட்டப்பட்டது.

ஆனால் தற்போது இப்படத்தின் தலைப்பை காஞ்சனா-2 ஆக மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

முனி 3 அல்ல... காஞ்சனா 2!

அதிக பொருட்செலவில் திகில் படமாக தயாராகியுள்ள இப்படத்தை காஞ்சனா போலவே வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாக்கியிருக்கிறார்களாம். ஆதலால் இப்படத்தின் தலைப்பை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திலும் லாரன்சே நாயகனாக நடித்து இயக்குகிறார். இதில் நாயகிகளாக டாப்ஸி, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

முதல் இரு பாகங்களிலும் முறையே வேதிகா மற்றும் லட்சுமி ராய் நாயகிகளாக நடித்தனர்.

ஏப்ரல் மாதம் கோடை ஸ்பெஷலாக இப்படம் வெளியாகவுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

 

பீகே ரீமேக்... கமலை இயக்கப் போகிறார் பாபநாசம் இயக்குநர்!

இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற பீகே படத்தின் தமிழ் ரீமேக் பற்றி தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தப் படத்தில் தான் நடிக்கப் போவதாக கமல் இதுவரை ஒரு சின்ன குறிப்பு கூட தரவில்லை. ஆனாலும் அவர்தான் நடிக்கிறார் என ஏகப்பட்ட செய்திகள்.

இப்போது அவரை இயக்கப் போவது யார் என்ற தகவல் கூட வெளியாகிவிட்டது.

பீகே ரீமேக்... கமலை இயக்கப் போகிறார் பாபநாசம் இயக்குநர்!

கமல் ஹாஸனை வைத்து த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசத்தை இயக்கியுள்ள ஜீத்து ஜோசப்தான், பீகே ரீமேக்கிலும் கமலை இயக்கப் போகிறாராம்.

இதுகுறித்து ஜீத்து ஜோசப் கூறுகையில், "பீகே ரீமேக்கில் கமலை இயக்கும் வாய்ப்பு வந்திருப்பது உண்மைதான். இதுகுறித்துப் பேசி வருகிறோம். விரைவில் விவரங்களைச் சொல்கிறேன்," என்று கூறியுள்ளார்.

பாபநாசம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

 

வாட்ஸ்ஆப்பில் பரவும் நடிகை சோனாக்ஷியின் (போலி) ஆபாச வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் போலி ஆபாச வீடியோ வாட்ஸ்ஆப்பில் வெளியாகியுள்ளது.

நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இதை பார்த்த சம்பந்தப்பட்ட நடிகைகள் பதறிப் போய் ஐயோ அந்த வீடியோவில், புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை, அது போலி என்று கூறி வருகின்றனர்.

வாட்ஸ்ஆப்பில் பரவும் நடிகை சோனாக்ஷியின் (போலி) ஆபாச வீடியோ

அண்மையில் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண செல்ஃபிக்கள் வெளியாகின. ராதிகா ஆப்தே தனது நிர்வாண புகைப்படம் குறித்து மறுப்பு தெரிவித்தார். ஆனால் ஸ்ரீதிவ்யா எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் ஆபாச வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது. ஆனால் அந்த வீடியோ போலியானது என்று கூறப்படுகிறது. வீடியோவில் இருப்பது சோனாக்ஷியை போன்றே இருக்கும் ஆபாசப்பட நடிகையாம். ஆனால் மக்கள் அதை சோனாக்ஷி என்று கூறி அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்களாம்.

ஆபாச வீடியோ பற்றி சோனாக்ஷி சின்ஹா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

 

அஜீத் பிறந்தநாளில் "ரஜினி"யுடன் மோதும் சூர்யாவின் 'மாஸ்'?

சென்னை: அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாஸ்' திரைப்படம் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் மாஸ். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இது தவிர பிரணிதா, சமுத்திரக்கனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அஜீத் பிறந்தநாளில்

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். இப்படத்தின் படப்பிடிப்புகள் துரித கதியில் நடந்து வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு தேதியே இன்னும் அறிவிக்கப் படாத நிலையில், இப்படத்தை மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதே நாளில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சூரி நடிக்கும்'ரஜினி முருகன்' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே மே 1ம் தேதியில் தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்விரு படங்களில் இசை மற்றும், டீஸர், டிரெய்லர்கள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அனிருத்தைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் கர்ஜிக்க வரும்‘சிங்கம் 3’.. "பெண் சிங்கம்" அனுஷ்கா?

சென்னை: மீண்டும் சூர்யா - ஹரி இருவரும் இணைந்து உருவாக்கும் 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகத்தில் இசை அனிருத் எனக் கூறப்படுகிறது.

அஞ்சான் படத்தைத் தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கும் '24' படத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரம் குமார் படத்தை சூர்யாவே தயாரிக்க இருக்கிறார்.

அனிருத்தைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் கர்ஜிக்க வரும்‘சிங்கம் 3’..

'24' படத்தில் நடித்துக் கொண்டே பாண்டிராஜ் இயக்கும் 'ஹைக்கூ' படத்திலும் சிறிய வேடத்தில் நடிக்க சூர்யா சம்மதித்திருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பார் எனக் கூறப்பட்டது.

ஏற்கனவே சிங்கம், சிங்கம் 2 படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்ததால், மீண்டும் அக்கூட்டணி சிங்கம் 3ஐ உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது சூர்யா - ஹரி இணையும் படம் 'சிங்கம் 3' என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும், சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் 'சிங்கம் 3' படத்திற்கு இசையமைக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் படம் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு கடைசியில், அல்லது தீபாவளிக்கு சிங்கம் 3 வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு பாகங்களிலும் "பெண் சிங்கமாக" நடித்த அனுஷ்கா தான் இப்படத்திலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பாரா இல்லையா என்பதெல்லாம், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது தெரிய வரும்.

 

நட்பில் துவங்கி உறவாக மாறிய ஆர்.சி.சக்தி... கமல் துயரம்

சென்னை: கலைஞனாக, நண்பனாக, உறவாக இருந்த ஆர்.சி.சக்தியின் மறைவு தனக்கு பெரும் இழப்பு என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

‘ஸ்பரிசம்', ‘சிறை', ‘வரம்', ‘உண்மைகள்','கூட்டுப்புழுக்கள்', ‘பத்தினிப் பெண்', ‘தாலி தானம்' உட்பட பல படங்களை இயக் கியவர் ஆர்.சி.சக்தி. ரஜினிகாந்த் நடித்த ‘தர்மயுத்தம்', கமல்ஹாசன் நடித்த ‘உணர்ச்சிகள்', ‘மனிதரில் இத்தனை நிறங்களா?' விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட ‘சிறை' படம் ஆர்.சி.சக்திக்கு புகழை பெற்றுத் தந்தது.

நட்பில் துவங்கி உறவாக மாறிய ஆர்.சி.சக்தி... கமல் துயரம்

இந்நிலையில், நோய்த் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சக்தி, சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.

நடிகர் கமலுக்கு மிகவும் நெருக்கமானவர் சக்தி. ‘என் நண்பர். என் குரு' என்று கமலால் அன்போடும் மரியாதையோடும் குறிப்பிடப்படுபவர்.

சக்தியின் மறைவு செய்தி கேட்டு, நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் கமல். அப்போது அவர் கூறியதாவது :-

‘‘கலைஞனாக, நண்பனாக, உறவாக ஆர்.சி.சக்தியின் மறைவு எனக்கு பெரும் இழப்பு. நட்பில் துவங்கி உறவாக மாறியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நல்ல நண்பன். ரசிகன். கடைசி வரை நல்ல நண்பராக இருந்தது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அவர் அப்படித்தான். முக்கியமாக, முதல் தர ரசிகராக இருந்த சக்தி அண்ணனின் இழப்பை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

ஆர்.சி.சக்தியின் பங்களிப்பு:

சக்தி மறைவு தொடர்பாக நடிகர் சிவக்குமார் கூறுகையில், "நல்ல இயக்குநர்களில் ஆர்.சி. சக்தி குறிப்பிடத்தக்கவர். நான் அவருடைய படங்களின் ரசிகன். அவரது படங்களில் வசனம் இயல்பாக அர்த்தமுள்ளதாக இருக்கும். சினிமாவை வித்தியாச மான கோணத்தில் அணுகிய படைப்பாளி. கமல்ஹாசனை ஒரு இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக வெளிக்கொண்டு வந்ததில் ஆர்.சி.சக்தியின் பங்களிப்பு பெரிது" எனத் தெரிவித்தார்.

நடிகை லட்சுமி கண்ணீர்:

சிறை உட்பட ஆர்.சி.சக்தியின் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லட்சுமி. சக்தியின் மறைவு தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘நடிகை, இயக்குநர் என்ற நிலையைத் தாண்டி என்னைத் தன் தங்கையாகவே கொண்டாடியவர் ஆர்.சி.சக்தி. பெண்களின் பார்வையை, அவர்களது மனதை, அவர்களது உள்ளக் கிடக்கையைத் தனது படைப்புகளில் முழுமையாக வெளிப்படுத்தியவர். சமரசம் செய்துகொள்ளாத நேர்மையான படைப்பாளி அவர். தனது கதாபாத்திரத்தை மிகையாக வெளிப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவரது மறைவை ஈடு செய்யமுடியாத இந்த நேரத்தில் நான் அவரது படங்களின் கதாநாயகி என்பதைப் பெருமையுடன் எண்ணிப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறேன்" என்றார்.

மறைந்த ஆர்.சி.சக்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

 

டால்பினுக்கு முத்தம்... குளியல் வீடியோ வலியை மறக்க ஐரோப்பிய நாடுகளில் ஹன்சிகா சுற்றுலா!

தனது குளியல் வீடியோ வெளியானதில் ஏகத்துக்கும் அப்செட் ஆன ஹன்சிகா, ஷூட்டிங்குக்கு கொஞ்ச நாள் பிரேக் விட்டார் அல்லவா..

இப்போதைக்கு இந்தியாவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் போயுள்ள ஹன்சிகா, குளியல் வீடியோ நினைப்பே வராத அளவுக்கு பல இடங்களையும் சுற்றிப் பார்த்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான ஹன்சிகா, ஒரு நட்சத்திர ஹோட்டலில் குளிக்கும்போது யாரோ நிர்வாணமாக படம்பிடித்துவிட்டனர்.

டால்பினுக்கு முத்தம்... குளியல் வீடியோ வலியை மறக்க ஐரோப்பிய நாடுகளில் ஹன்சிகா சுற்றுலா!

அதனை சமூக வலைத் தளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பிலும் பதிவேற்றிவிட, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை ஹன்சிகா மறுக்கவுமில்லை, போலீசில் புகார் தரவும் இல்லை.

இந்த வீடியோ விவகாரத்தால் பெரிதும் விரக்தியடைந்த ஹன்சிகா, தற்காலிகமாக தனது படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் விடுமுறை எடுத்துக் கொண்டார்.

இப்போது ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள ஹன்சிகா,
ஒரு பொழுதுபோக்குப் பூங்காவில் டால்பினுக்கு முத்தம் கொடுப்பது போன்ற படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

'எட்டு மாத தொடர் ஷூட்டிங்குக்கு விடுமுறை... ஜாலியா இருக்கு. டால்பினை முத்தமிட்டது மறக்க முடியாதது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹன்சிகா நடிப்பில் வாலு, ரோமியோ ஜூலியட், புலி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

 

ஒருவரது ஆளுமையைக் காப்பியடிப்பது மகா தவறு!- தீபிகா படுகோன்

ஒருவரது ஆளுமையை காப்பியடிப்பது மகா பெரிய தவறு என்று கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், தமிழில் ரஜினியுடன் மோஷன் கேப்சர் தொழில் நுட்பப் படமான கோச்சடையானில் நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஒருவரது ஆளுமையைக் காப்பியடிப்பது மகா தவறு!- தீபிகா படுகோன்

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், தனக்குப் பிடித்த நடிகராக ரஜினியை மட்டும் குறிப்பிட்டதோடு, அவரது அடக்கமும் எளிமையும் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து அவரிடம், ஒருவரிடமிருந்து எதை காப்பியடிக்கக் கூடாது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், 'ஒருவரது ஆளுமையை காப்பியடிப்பது எனக்குப் பிடிக்காது. அதி பெரிய தவறும் கூட', என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மனித வெடிகுண்டாக நடித்த ப்ளோராவுக்கு கொலை மிரட்டல்

தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த ப்ளோராவுக்கு கொலை தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.

கவர்ச்சி நடிகையான ப்ளோரா, தமிழில் குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ரிலீசான சர்ச்சைக்குரிய மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் மனித வெடி குண்டாக நடித்திருந்தார் ப்ளோரா. மதங்களை விமர்சிக்கும் இந்தப் படத்தில் பெண் தீவிரவாதியைப் போல் அவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

மனித வெடிகுண்டாக நடித்த ப்ளோராவுக்கு கொலை மிரட்டல்

இந்த கேரக்டரில் ப்ளோரா நடித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மத அமைப்புகளை சேர்ந்த சிலர் இணைய தளங்களில் புளோராவை கண்டித்திருந்தனர்.

தற்போது அவருக்கு மொபைல் போனில் அழைப்புகளாகவும், குறுஞ்செய்திகளாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றனவாம்.

இதனால் பயந்துபோன ப்ளோரா போலீசில் புகார் செய்துள்ளார். தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அந்த படத்தில் நடிக்கவில்லை. எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

 

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு நேற்று வளைகாப்பு நடைபெற்றது.

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தொழிலதிபர் அஸ்வினை மணந்த அவர், அதன் பிறகு ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கினார்.

இந்தப் படம் மூலம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்டரிங் 3 டி படத்தை இயக்கியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு

திரையுலகில் சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக குழந்தைப் பெறுவதை தள்ளிப் போட்டு வந்தார் சவுந்தர்யா. கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இதனைக் குறிப்பிட்ட தந்தை ரஜினி, முதலில் குழந்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கிய பிறகு என்ன சாதனைகள் வேண்டுமானாலும் செய்யலாம் என அறிவுரை கூறினார்.

இப்போது சவுந்தர்யா தாய்மைப் பேறு அடைந்துள்ளார். அவருக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு, சவுந்தர்யாவை ஆசீர்வதித்தனர்.

 

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா- கலைப்புலி தாணு

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு விரைவில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார்.

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா- கலைப்புலி தாணு

இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு பேசுகையில், "

இவ்விழாவிற்கு விழாவிற்கு வருமாறு இளையராஜா அவர்களை அன்புடன் நான் அழைக்கும்போது, இளையராஜா அவருடைய தாய், தந்தை இடத்தில் பூஜை நடத்திக் கொண்டிருந்தார். நான் கூறியதும் உடனடியாக கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.

இப்ராகிம் ராவுத்தர் 95 சதவீத தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள் என்று கூறினார். தயாரிப்பாளர்களாக இருக்கும் 500 பேருக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அவர்களது இல்லம் தேடி செல்லும் அளவுக்கு எங்களுடைய உழைப்பு இருக்கும்.

இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் மெட்டமைத்திருக்கிறார். ஆனால், எந்த பாடலும் மற்றொரு பாடலை தொடாமல் இருக்கும். அவர் ஒரு அட்சயப் பாத்திரம், அமுத ஊற்று.

1000 படங்களைத் தொட்ட அவரது சாதனையைப் பாராட்டும் விதமாக அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் மிகப்பெரிய விழாவாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தியாவில் இதுபோன்ற ஒரு விழா நடத்தியிருக்க முடியாது என்கிற அளவுக்கு அது பிரம்மாண்டமாக இருக்கும்," என்றார்.

 

காட்சிகள் நீக்கம்.. மறு படப்பிடிப்பு... கிடைத்தது வஜ்ரம் படத்துக்கு யு!

காட்சிகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு வஜ்ரம் படத்துக்கு யு சான்று அளித்துள்ளனர் தணிக்கைக் குழுவினர்.

பசங்க, கோலிசோடா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் தற்போது நடித்து வரும் படம் ‘வஜ்ரம்'.

இப்படத்தில் கதாநாயகியாக பவானி ரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

காட்சிகள் நீக்கம்.. மறு படப்பிடிப்பு... கிடைத்தது வஜ்ரம் படத்துக்கு யு!

பைசல் இசையமைக்கும் இப்படத்திற்கு குமரேசன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை அமைத்து எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக பி.ராமு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதமே தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி யுஏ சான்றிதழ்தான் தர முடியும் என்று கறாராகக் கூறிவிட்டனர்.

காட்சிகள் நீக்கம்.. மறு படப்பிடிப்பு... கிடைத்தது வஜ்ரம் படத்துக்கு யு!

படத்திற்கு யு சான்றிதழ் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்த படக் குழு, சில காட்சிகளை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக வேறு காட்சிகளைப் படமாக்கி இணைத்து சென்சாருக்கு அனுப்பினர்.

இந்தக் காட்சிகளை அனுமதித்த தணிக்கை குழுவினர், படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இம்மாதம் 27ம் தேதி வஜ்ரம் வெளியாகிறது.

 

பிரபல இயக்குநர் ஆர்சி சக்தி மரணம்.. ரஜினி, கமலை இயக்கியவர்!

ரஜினி, கமல் போன்ற முக்கிய நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆர் சி சக்தி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம், கமல் ஹாஸனை வைத்து உணர்ச்சிகள், லட்சுமி நடித்த தவம், வரம், ரகுவரன் நடித்த கூட்டுப் புழுக்கள், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் ஆர்சி சக்தி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் திரைத் துறையில் நாட்டம் கொண்டிருந்தார். சுப்பு ஆறுமுகம் நடத்திய வில்லுப்பாட்டு குழுவில் சேர்ந்தார். பின்னர் அன்னை வேளாங்கன்னி படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

பிரபல இயக்குநர் ஆர்சி சக்தி மரணம்.. ரஜினி, கமலை இயக்கியவர்!

பின்னர் 1972-ம் ஆண்டு கமல் ஹாஸனை வைத்து உணர்ச்சிகள் படத்தை எழுதி இயக்கினார். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய விஷயத்தை எடுத்து படமாக்கி, விமர்சகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.

1978-ல் ஆர் சி சக்தி இயக்கிய மனிதரில் இத்தனை நிறங்களா படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதில் கமல் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

அதே ஆண்டில் ரஜினியை வைத்து தர்மயுத்தம் படத்தை இயக்கி பெரும் வெற்றி கண்டார்.

லட்சுமியை வைத்து அவர் இயக்கிய சிறை படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழக அரசின் விருதையும் பெற்றது.

ஆர் சி சக்தி கடைசியாக இயக்கிய படம் பத்தினிப் பெண். 1993-ல் வெளியான இந்தப் படத்துக்கு தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதும் கிடைத்தன.

ஆர் சி சக்தி கடந்த ஆண்டுதான் தனது பவள விழாவைக் கொண்டாடினார். கமல் ஹாஸன் தலைமையில் இந்த விழா நடந்தது நினைவிருக்கலாம்.

சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடற்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ஆர் சி சக்தி, வட பழனியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று பிற்பகல் மரணமடைந்தார்.

அவருக்கு செஞ்சிலட்சுமி என்ற மனைவியும், செல்வம் என்ற மகனும், சாந்தி, மகேஸ்வரி ஆகிய மகள்களும், 5 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

அவருடைய உடல் விருகம்பாக்கம் சாய்நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச் சடங்குகள் நடக்கிறது.

 

கமலுக்குக் கிடைக்காட்டியும், கமல் பட டெக்னீஷியனுக்கு ஆஸ்கர் கிடைச்சிருச்சே!

சென்னை: கமல்ஹாசன் படத்து டெக்னீஷியன் ஒருவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல இதுவும் தற்செயலானதுதான்.

கமல்ஹாசனின் உத்தமவில்லன் படத்தின் சவுண்ட் மிக்ஸராக அதாவது ஒலிக் கலப்பாளராக பணியாற்றி வருபவர் கிரேக்மேன். இவர் ஒரு ரீரெக்கார்டிங் மிக்ஸர் ஆவார். உத்தமவில்லன் படத்திற்காக இவரை பிரத்யேகமாக அழைத்து வந்துள்ளனர். இவருக்குத்தான் தற்போது ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

கமலுக்குக் கிடைக்காட்டியும், கமல் பட டெக்னீஷியனுக்கு ஆஸ்கர் கிடைச்சிருச்சே!

இன்று அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் விப்ளாஷ் என்ற படத்துக்கு சில ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று சவுண்ட் மிக்ஸிங்குக்கான விருது. இவ்விருதை கிரேக்மேன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்தியப் படம் ஒன்றுக்கு கிரேக்மேன் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். முதல் படத்தில் பணியாற்றும்போதே அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது உத்தமவில்லன் பட யூனிட்டை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.

என்னவோ போங்கப்பா, கமல் ஆஸ்கரை வேண்டாம் என்று கூறினாலும், ஆஸ்கர் விருது கமலை விடுவதாகத் தெரியவில்லை...!

 

தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் - இளையராஜா தொடங்கி வைத்தார்

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று அம்மா அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பசியோடு வருபவர்கள் வயிறார சாப்பிட இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு அறிவித்திருந்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் - இளையராஜா தொடங்கி வைத்தார்

அதை இன்று செயல்படுத்திவிட்டார்.

இந்தத் திட்டத்துக்கு அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனை இளையராஜா தன் கையால் உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் - இளையராஜா தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, துணை தலைவர்கள் தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் தியாகராஜன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துடன் இந்தத் திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு

சென்னை: தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் இன்று அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த இளையராஜா, 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. என்று மட்டுமல்ல, அம்மான்னா சும்மா இல்லடா. என்றும் நான் பாடியிருக்கிறேன்," என்றார்.

தப்பா பாடிட்டானே பாரதி...

இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், "தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாருடைய வரிகளை கேட்கும்போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி, என்றுதான் நினைப்பேன்.

அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு

சாப்பாடுதானே போடணும்!

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போடுவோம் என்று பாடியிருக்கணுமே தவிர, ஜெகத்தினை எதுக்கு அழிக்கணும்? சாப்பாடு போடுவதற்குத்தான் இங்கு இயற்கை காத்துக் கிடக்கிறதே. மழை பொழிந்தால் பயிர்கள் எல்லாம் விளைகின்றன.

அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு

பாராட்ட வேண்டிய திட்டம்

மழை பொழிந்தால் நிலம் ஈரமாகிறது. காய்ந்து போன பாறைகூட ஈரமாகிறது. அந்த ஈரம் நம்முடைய மனதில் இல்லையா? தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உணவளிப்போம். இந்த திட்டம் உண்மையாகவே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

பசியோடுதான் வந்தேன்

தயாரிப்பாளர்கள் சங்கம் ஒற்றுமையாக இருந்து ஒரு காரியத்தை செய்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். எல்லோரும் பசியோடுதான் வந்தோம். நானும் பசியோடுதான் வந்தேன். பசி என்றால் கலைப் பசியோடு வந்தோம்.

அந்த நட்பு அப்படியே இருக்கா?

பசி எங்களுக்கு துன்பத்தை தரவில்லை. சந்தோஷமாக இருந்தோம். இந்த பெயர், புகழ் எல்லாம் வந்த பின்னால் அந்த சந்தோஷம், நட்புரிமை எல்லாம் இப்போது இருக்கிறதா என்றால், இல்லை. அந்த பழைய ஆட்கள் செத்துப் போய்விட்டார்கள். பழைய நண்பர்கள் அல்லவா? அவர்களெல்லாம் அந்த குணங்களோடு அப்படியே இறந்து போய்விட்டார்கள்.

பணம், புகழ்தான் விஷம்

அது இறந்து போவதற்கு காரணமாக இருந்தது பெயரும், புகழும், பணமும் அத்தனையும். அப்படியான ஒரு புகழும், பெயரும் நமக்கு தேவையா? மனித உள்ளத்தை கொல்லக்கூடிய இந்த விஷம் நமக்கு தேவையா?

அம்மான்னா சும்மா இல்லடா...! - இளையராஜா பேச்சு

மகிழ்ச்சி தரும் ஒற்றுமை

தயாரிப்பாளார்களா நீங்கள்? நல்ல நடிகர்களை, இயக்குனர்களை, நல்ல கதைகளை, ரசிகர்களை, தியேட்டர் உரிமையாளர்களை, நல்ல இசையமைப்பாளர்களை தயாரிக்கிறீர்கள், எதை நீங்கள் தயாரிக்கவில்லை.

எல்லாவற்றையும் தயாரிக்கும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்து இப்போது ஒற்றுமையாக இணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒற்றுமையோடு மட்டுமில்லாமல், ஒரு முடிவு எடுத்தால் 100 சதவீதம் அதற்கு பின்னால் நின்று ஒத்துழைப்பு கொடுக்கும் அளவுக்கு நீங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அம்மான்னா சும்மா இல்லடா

இந்த அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று மட்டும் நான் பாடவில்லை. 'அம்மான்னா சும்மா இல்லடா...' என்றும் கூட நான் பாடியிருக்கிறேன்," என்றார்.

அம்மா அன்னம் அளிக்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரால் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.