பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து... ஹீரோ சசிகுமாருக்கு கை முறிந்தது!

|

இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் 'தாரை தப்பட்டை' படத்தில் எம் சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடிகர் சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது.

பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து... ஹீரோ சசிகுமாருக்கு கை முறிந்தது!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக் காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும், 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தனர்.

இன்று படமாக்கப்பட்ட ஆக்ரோஷமான, அதிரடியான சண்டைக்காட்சி தொடர்ச்சியின் போது நடிகர் சசிகுமார் சற்றும் எதிர்பாரா வண்ணம் விபத்துக்குள்ளானார், அவரது இடது கை எலும்பு முறிந்தது.

உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் M.சசிக்குமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுபட்டது. சிறிது காலம் ஒய்வெடுக்கும் படி மருத்துவர்கள் சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

சசிகுமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படப்பிடிப்பு துவங்கும்.

 

Post a Comment