மே 15-ம் தேதி முதல் ஜோதிகா நடித்த 36 வயதினிலே!

|

திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள முதல் படமான '36 வயதினிலே' திரைப்படம் மே 15ம் தேதி வெளியாகிறது.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ'. நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிய இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார்.

36 Vayathinile from May 15

இந்தப் படத்தை ஜோதிகாவின் கணவரும், முன்னணி நடிகருமான சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.

நீண்ட நாட்கள் நடிப்புக்கு ஓய்வு தந்திருந்த நடிகை ஜோதிகாவின் ரீ-என்ட்ரி படமாக இது பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. எந்த ஒரு காட்சியையும் நீக்கச் சொல்லாமல் படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

மே 8ம் தேதி இப்படத்தை வெளியிடத் தீர்மானித்திருத்தார்கள். ஒரு பாடல் காட்சியை ரீ ஷூட் பண்ண வேண்டியிருந்ததால், ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டார்கள்.

இப்போது வரும் மே 15-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 

Post a Comment