சென்னை: புதுமுகங்கள் நடிப்பில் மதுரை மாவேந்தர்கள் என்ற படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் விஜய் கண்ணன். ஜனவரியில் பாடல்களை வெளியிட்டு, பிப்ரவரி மாதம் படத்தை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
என்ன காரணத்தினாலோ பாடல்களை கூட இதுவரை நமது காதுகளில் காட்ட வில்லை. ஒளிப்பதிவாளர் குமார் மதுரை மாவேந்தர்கள் படத்தின் ஒளிப்பதிவு எனது வாழ்க்கையிலேயே சவாலான ஒன்று என்று கூறியிருக்கிறார்..படம் வரட்டும் பாக்கலாம்..படத்தின் முதல் பாதி மதுரையிலும் இரண்டாம் பாதி சென்னையிலும் எடுக்கப் பட்டிருக்கிறது.
நாயகன் அஜய் இதில் ஆட்டோ டிரைவராக நடித்திருக்கிறார், நாயகி அர்ச்சனாவுக்கு வேலைக்கு செல்லும் பெண் வேடம். காமெடி மற்றும் காதலை மையமாக வைத்து படம் எடுக்கப் பட்டிருக்கிறதாம்.
நாயகி அர்ச்சனாவை வைத்து கோவளம் கடற்கரையில் நடுக் கடலில் ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும் போது போட் உடைந்து நாயகிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, இருந்தும் பொருட்படுத்தாமல் காட்சிகளில் நடித்து கொடுத்திருக்கிறார்.
படத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது அதாவது துணை நடிகர்களாக வந்த ஒரு நடிகரும், நடிகையும் காதலித்து ஊரை விட்டு ஓடிவிட ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் இருந்து சத்தியம்மா இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டு வந்திருக்காரு இயக்குனர் விஜய்.
நடிகர் அப்புக்குட்டி, நடிகை தேவதர்ஷினி, பூவிலங்கு மோகன் மற்றும் காதல் சுகுமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விரைவில் வெளிவர இருக்கும் மதுரை மாவேந்தர்கள் படத்திற்கு இசையமைத் திருப்பவர் பிஜு ஜேக்கப்.
படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டும் எடுக்கப்பட உள்ளது அதை முடித்துவிட்டு படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம் என்று படத்தின் இயக்குனர் விஜய் கூறியிருக்கிறார்.
Post a Comment