சென்னை: ரிப்பன் நடிகையின் அலப்பறை தாங்க முடியவில்லை என்று தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்கள்.
சங்கம் வைத்த படம் மூலம் பிரபலமானவர் ஆந்திராவில் இருந்து வந்த ரிப்பன் நடிகை. அந்த படம் ஓடியதால் அவருக்கு மவுசு ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான அவரும், சங்கத் தலைவரும் சேர்ந்து நடித்த படம் ஹிட்டானது.
இந்நிலையில் நடிகை படப்பிடிப்பு தளத்தில் ஓவர் பந்தா செய்கிறாராம். நான் எல்லாம் பெரிய நடிகையாக்கும், எனக்கு தனி கேரவன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். கேரவனோடு நிறுத்திக் கொள்வது இல்லை. நான் தங்கினால் நகரில் இருக்கும் பெரிய ஸ்டார் ஹோட்டலில் மட்டுமே தங்குவேன் என்று கூறி தயாரிப்பாளர்களின் பாக்கெட்டில் ஓட்டை போடுகிறாராம்.
அது போதாது என்று தனக்கு உதவிக்கு என 6, 7 பேரை வைத்துள்ளாராம். அவர்களுக்கும் சேர்த்து சம்பளம் கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறுகிறாராம் நடிகை. வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் அவர் கையை காட்டும் நபர்களுக்கும் சம்பளம் தருகிறார்களாம்.
வளர்ந்து வரும் நடிகையாக இருக்கையிலேயே இத்தனை பந்தாவா, வளர்ந்தாப்புல தான் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
Post a Comment