சென்னை: பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் மசாலா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கேமராமேன் லக்ஷ்மண் எழுதி இயக்கும் முதல் படம், மசாலா படம். இப்படத்தில் பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா, புதுமுகம் கௌரவ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். நில் கவனி செல்லாதே படத்தின் நாயகி லக்ஷ்மி தேவி ஹீரோயின்.
படத்தின் கதை இது தான். அதாவது, தமிழ்ப் படங்களை விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்கவிடும் ஒருவரை அழைத்து, சரி, நீ சொல்ற மாதிரி மசாலா இல்லாத ஒரு படத்தை எடு, நான் பணம் தர்றேன் என்கிறாராம் ஒருவர்.
அந்த விமர்சகரும் மூன்று பேருடைய வாழ்க்கையை ஃபாலோ செய்து ஒரு கதையை ரெடி செய்கிறார். கடைசியில் பார்த்தால், அந்த உண்மைக் கதையும் வழக்கமான தமிழ் மசாலா படம் போலவே இருக்கிறதாம். இதுதான் மசாலா படத்தின் அவுட் லைன்.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆட்களை அடித்து நொறுக்கும் ரவுடியாக பாபி சிம்ஹா தோன்றுகிறார். இரண்டு கையிலும் ஒவ்வொரு துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு பீச்சில் பலூன் சுடும் தோரணையில் போஸ் கொடுக்கிறார் சிவா. புதுமுகம் கௌரவ், ஒரு பெண்ணிடம் மலர் கொடுத்து காதலைச் சொல்லும் போஸில் நிற்கிறார்.
இவற்றைப் பார்க்கும் போது ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த காமெடிப் படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.
Post a Comment