குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த குயின் நடிகைக்கு சீரியலில் கிடைத்தது என்னவோ சின்னச் சின்ன கதாபாத்திரங்கள். சினிமாவிலும் தோழி வேடத்தில் நடித்து வந்தார். திடீரென்று சின்னத்திரை வேண்டாம், சினிமாவே போதும் என்று முடிவெடுத்தார். போட்டோ ஷூட் நடத்தி உலாவ விட்டார். ஆனாலும் ஒரு சில படங்கள் தவிர வாய்ப்புகள் குவியவில்லை.
சீரியல் பக்கம் ஒதுங்கிவிடலாமா என்று யோசித்தவருக்கு இதிகாச தொடரில் வாய்ப்பு கிடைக்கவே மீண்டும் சின்னத்திரையில் தலைகாட்டத் தொடங்கினார். சித்தி நடிகையின் நிறுவனம் தயாரிக்கும் 2 சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இதுவரை 25 படங்கள் 50 சீரியல்களை முடித்து விட்டாராம் நடிகை. சீரியல் வேண்டாம் சினிமாவே போதும் என்று ஒதுங்கியவரை சித்தி நடிகைதான் மீண்டும் சீரியலுக்கு அழைத்து வந்தாராம். சித்தி தயாரிக்கும் 2 சீரியல்களில் ஒன்று வில்லியாகவும் மற்றொன்றில் ஹீரோயினாகவும் நடிக்கிறார். இதுவே போதும் என்கிறார். காரணம் சித்திதான் காட்மதராம். அவருடைய தொடரில் நடித்தாலே போதும் வேறு தொடர்களில் நடிக்க நேரமில்லை என்று கூறி மறுத்து விடுகிறார்.
தமிழுக்கு நோ... இந்திக்கு ஒகே...
தமிழ் சீரியலில் நடிக்க பல நடிகைகள் வாய்ப்பு தேடி வரும் நிலையில் மொத்தமாக கும்பிடு போட்டுவிட்டு இந்தி சீரியல்கள் பக்கம் கரை ஒதுங்கி விட்டார் அந்த இளம் நடிகை. மாடலான அந்த நடிகைக்கு சூரிய தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பான அந்த தொடரில் அவரும் நடித்து வந்தார். தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகளையும் மறுத்து வந்தார். இடையில் என்ன நடந்ததோ? சீரியலை சட்டென்று நிறுத்திவிட்டது சூரிய தொலைக்காட்சி. அப்பாடா ஆளை விடுங்கள் என்று அந்த நடிகை வடக்குதேசத்திற்கே திரும்பிவிட்டாராம். காரணம் அங்கே இந்திப்பட வாய்ப்புகள் கிடைத்ததுதானம்.
மாடர்ன் மங்காத்தாவான அந்த நடிகை தமிழில் அடக்க ஒடுக்க கேரக்டரில் நடித்தார். இது தனக்கு செட் ஆகாது என்று நினைத்துதான் மீண்டும் வடக்கு பக்கமே சென்று விட்டார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இந்திப்பட வாய்ப்பும், இந்தி சீரியல் வாய்ப்பும் கிடைத்து வருவதால் தமிழுக்கு மொத்தமாக டாட்டா காட்டி விட்டாராம்.
Post a Comment