ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் இப்போது நாயகனாக அறிமுகமாகிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா - 2 படத்தில் இடம் பெற்ற சில்லாட்ட பில்லாட்ட.. என்ற பாடலில் ராகவா லாரன்ஸ் 'கூப்பிட்றா தம்பிய..' என்றதும் புயல் போல நடனமாடி அறிமுகமானாரே.. அவர்தான் எல்வின்.
அப்போதே அடுத்து இவர் ஹீரோவாக வரப் போகிறார் என்பது புரிந்துவிட்டது. இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் அவருக்கு கதை சொல்லி வருகிறார்களாம்.
தம்பிக்குப் பொருத்தமான கதையை ராகவா லாரன்ஸே தேர்வு செய்து வருகிறார்.
நடனம் மட்டும் இல்லாமல் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை ஈடுபடுத்தி வருகிறார் லாரன்ஸ்.
படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ராகவா லாரன்ஸ்.
Post a Comment