சண்டிகர்: சண்டிகரைச் சேர்ந்த ஷிகா மொங்கா என்ற 34 வயதுப் பெண் கொக்க கோலா நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாக, வழக்கொன்றை அந்த நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்திருக்கிறார்.
அதாவது அந்த நிறுவனம் 2௦௦௦ ம் ஆண்டில் போட்டி ஒன்றை அறிவித்து இருந்தது, அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகள் பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக்ரோஷனுடன் இணைந்து இரவு உணவு சாப்பிடலாம் என்று கூறியது.
இதனால் ஆர்வம் கொண்ட ஷிகா மொங்கா அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார், ஆனால் சொன்னபடி ஹிருத்திக் ரோஷனுடன் இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பை ஷிகாவிற்கு கொக்க கோலா ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
2 வருடங்கள் பொறுத்துப் பார்த்த ஷிகா 2003 ம் ஆண்டில் கொக்க கோலா நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார், இதனால் அதிர்ந்து போன கோலா நிறுவனம் ஷிகாவிற்கு சுமார் 5 லட்சங்களை நஷ்ட ஈடாக வழங்க முன்வந்தது.
ஆனால் ஷிகா அதனை ஏற்க மறுத்து விட்டார், சண்டிகர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு வருகின்ற 24 (ஆகஸ்ட்) ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கின்றது.
வழக்கில் ஷிகாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில், ஷிகா கோலா நிறுவனத்திடம் இருந்து நஷ்ட ஈடாக சுமார் 2.5 கோடி வரை பெற வாய்ப்புள்ளது.
ஒரு பெரிய வணிக ஊழலை ஷிகா துணிந்து அம்பலப்படுத்தி இருக்கிறார், இதற்காக அவர் நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டிய கட்டணத் தொகையான 2.43 லட்சங்களை தள்ளுபடி செய்யவும் நீதிமன்றம் தீர்மானித்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
வழக்கில் கோலாவிற்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் கோலாவின் சந்தை மதிப்புகள் மற்றும் நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியவை சரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தற்பொழுது மொகஞ்சதாரோ என்ற வரலாற்றுப் படத்தில் நடித்து வரும் நடிகர் ஹிருத்திக்ரோஷன் இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகாவின் 20 வயதில் இந்தப் போட்டியில் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார், ஆனால் 15 வருடங்கள் கடந்தும் ஹிருத்திக் ரோஷனுடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பை கோலா நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
ஒரு டின்னருக்கு 15 வருடங்கள் என்பதெல்லாம் ரொம்பவே அதிகம் தான்.
Post a Comment