நடு ராத்திரியில் வெளியே வரும் புலி.. டிரெய்லர் அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்ட சோனி

|

சென்னை: விஜய் ரசிகர்களுக்கு ஒரு அன்பான செய்தி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது.அனைவரும் கண்டு மகிழுங்கள் என்று சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே வெளியான புலி படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெருவாரியான வரவேற்பைப் பெற்றதுடன் பல புதிய வரலாறுகளையும் படைத்தது.

அடுத்ததாக புலி படத்தின் டிரைலரை 20 ம் தேதியில் வெளியிடுகிறோம் என்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளில், நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

விஜயின் அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்தது, இதனைத் தொடர்ந்து தற்போது புலி படத்தின் டிரைலரை இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிடுவதாக சோனி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


இதனால் மகிழ்ச்சி அடைந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போது இந்த செய்தியை தீயாய் பரப்பி வருகின்றனர், தீயா வேலை செய்யணும் பசங்களா....

 

Post a Comment