சம்பளம் என்னாச்சுப்பா.. தலையெழுத்தை நினைத்துப் புலம்பும் 2 எழுத்து படக் குழுவினர்!

|

சென்னை: தமிழ்நாட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த இரண்டெழுத்துப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, அடுத்த மாதம் படமே வெளியாகப் போகின்றது.

ஆனால் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறிய நடிகர்களுக்கு இன்னும் சம்பளம் முழுவதுமாக வழங்கப் படவில்லையாம்.

பலமுறை சம்பளத்தைக் கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்களாம், மிகவும் வலியுறுத்திக் கேட்கிறவர்களுக்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விரைவில் இன்னொரு படத்தைத் தொடங்கவிருக்கிறார். அந்தப்படத்தில் உங்களுக்கு வேலை இருக்காது என்று பதில் வருகிறதாம்.

இதனால் படத்தில் பணியாற்றியவர்கள் வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் மெல்லவும் முடியாமல் இரண்டிற்கும் இடையில் கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இத்தனைக்கும் பெரிய பட்ஜெட்டில் தான் படத்தை எடுத்திருக்கின்றனர், விளம்பரங்கள் போன்றவற்றிற்கு ஏகப்பட்ட செலவுகளையும் செய்து வருகின்றனர்.

ஆனால் கஷ்டப்பட்டு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பாக்கியை செட்டில் செய்ய மனம் வரவில்லையே, தெரியாமலா சொன்னார்கள் சினிமா ஒரு கனவுலகம் என்று.

 

Post a Comment