மும்பை: நடிகை தபு காதலில் மூழ்கியிருக்கிறார்.. இதுதான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு.
அதிலும் தன்னை விட வயதில் இளையவருடன் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பதுதான் கிசுகிசுவின் முக்கிய சாராம்சம்.
இந்தித் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த நடிகைதான் தபு. ஷபானா ஆஸ்மியின் அக்காள் மகள். இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வரும் தபு, சிங்கிளாகவே முதிர் கன்னியாகி விட்டார்.
இந்த நிலையில் தற்போது தபு காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள், அதுவும் தன்னை விட வயதில் குறைந்த ஆணுடன் காதலில் திளைத்துள்ளாராம் தபு.
திரிஷ்யம் படத்தில் இறுக்கமான போலீஸ் அதிகாரி வேடத்தில் அசத்தியிருக்கிறார் தபு. படத்தில் மற்ற முக்கிய கேரக்டர்களை விட தபுவின் இந்த பாத்திரம்தான் பிரமாதமாக வந்துள்ளதாம். எனவேதான் திரிஷ்யம், இந்தியில் தோல்வி என்றாலும் கூட தபுவுக்காக ஓடி வருகிறதாம்.
44 வயதாகி விட்ட தபு, தற்போது மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் காதலில் ஈடுபட்டுள்ளாராம். அவருக்கு தபுவை விட வயது குறைவாம். அவருக்கு இது முதல் காதலா இல்லையா என்பது தெரியவில்லை.
தபு இதுகுறித்து இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் உள்பட எல்லாவற்றுக்கும் நான் தயாராகவே உள்ளேன் என்று கூறியிருந்தார். இதை வைத்துப் பார்க்கும்போது தபு காதலில் விழுந்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சந்தோஷம்!
Post a Comment